5691.
ஓடென்ற வுச்சாடங் கூறும்போது வுத்தமனே யதர்வணமும் நீங்கியல்லோ
நீடென்று வஸ்துசுத்தி பானஞ்செய்து நிலையுடனே பாலமிர்தம் வாயிலிட்டு
கூடென்று வசிமூலி வாயிற்கொண்டு கொற்றவனே செவிதனிலே யூதும்போது
மேடென்று வையகத்தில் கண்திறந்து மேதினியில் உயிரதுவும் வருகும்பாரே
5692.
பாரேதான் சித்துமுனி ரிஷிகள்தாமும் பாருலகில் அதர்வணத்தை மறைத்துவைத்தார்
ஆரோதான் சொன்னவர்கள் ஆருமில்லை வப்பனே யாமுமக்கு சொன்னோம்பாரு
நேரேதான் காலாங்கி நாதர்தாமும் நேர்மையுடன் எந்தனுக்கு உரைத்தநீதி
பேரேதான் சொல்வதற்கு யாருமில்லை பேரான போகரிஷி யுரைத்தேன்பாரே
5693.
உரைத்தேனே ஏழாயிர சத்தகாண்டம் வுற்பனமும் விற்பனமும் மெத்தவுண்டு
நிரைத்தேனே யாறாவது காண்டத்துள்ளே நேர்மையுடன் அதர்வணத்தைக் கூறினேன்யான்
விரைத்ததொரு பொருளெல்லாம் இதிலடக்கம் விருப்பமுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
குரைத்ததொரு பொருளெல்லாம் எந்தனாயர் குருமுனியாம் அகஸ்தியத்தில் காணலாமே
5694.
காணலாம் அகத்தியனார் காவியத்தில் கருவான பன்னீரா யிரத்திலப்பா
பூணலாம் பனிரெண்டு காண்டத்துள்ளே புகட்டினார் கோடிவகைக் களஞ்சியங்கள்
தோணவே யண்டசராசரங் களெல்லாம் துறட்டியென்ற குடலதுபோல் கூறினார்கள்
வேணபடி குருநூலாம் பன்னீராயிரம் விருப்பமுடன் பாடிவைத்தார் முனிவர்தாமே
5695.
முனியான என்பாட்டன் அகஸ்தியர்தாமும் முனையான காலாங்கி நாதர்தாமும்
சொனைபோலே சாத்திரங்கள் எனக்குரைத்தார் தோற்றமுடன் பிரகாச மானசித்து
மனைதோறும் சாத்திரவே தாகமங்கள் மார்க்கமுடன் பாடிவைத்தார் பலநூல்சித்தர்
வினையாலே மாண்டதொரு மாண்பருக்கு விரிவான அதர்வணங்கள் சொல்லார்காணே
5696.
கானான புலிப்பாணி மைந்தாகேளு தகைமையுள்ள காலாங்கி சொன்னநீதி
கோனான பதினென்பேர் சித்தர்தாமும் கொற்றவனே நவகோடி சித்தர்தாமும்
பானான நாற்பத்தெண் பேர்களப்பா பலபலவாஞ் சாத்திரங்கள் பாடிவைத்தார்
மானான தலைமுறைகள் சாதிவர்க்கம் மன்னவனே சாத்திரத்திற் சொல்லாரன்றே
5697.
சொல்லவில்லை சிலபேர்கள் சொன்னாரப்பா சுந்தரனே சிலபேர்கள் மறைத்துவைத்தார்
வெல்லவே காலாங்கி நாதர்தாமும் வேகமுடன் குளிகையது கொண்டுமல்லோ
கல்லான மலைகளிலும் குகைகள்தன்னில் கண்டுமே ஆராய்ந்து சித்துதம்மை
புல்லவே சாதிபேதங்கள் ரெண்டு புகழான சாத்திரத்தில் வசனித்தாரே
5698.
வசனித்தார் எந்தமக்கு காலாங்கிநாதர் வளமுடனே சொன்னதொரு சாதிமார்க்கம்
நிசமுடனே யானுரைப்பேன் நீதிவானே நிஷ்களங்க மானதொரு பேதஞ்சொல்வேன்
தசமான காலாங்கி நாதர்தாமும் தாக்கான மயன்சாதி யென்னலாகும்
கசடன்று தலைமுறைகள் பத்தேயாகும் காசினியில் கண்டவரை யுரைத்திட்டோமே
5699.
உரைத்தோமே எந்தனிட சாதிமார்க்கம் வுத்தமனே விஸ்வகர்ம மென்னலாகும்
நிரைத்ததொரு ரோமரிஷி சாதிபேதம் நிலையான வலைவீசுஞ் சாதியப்பா
திரைத்ததொரு எந்தனது தலைமுறைதானப்பா திரளான பதினெட்டு தலைமுறையாகும்
வரைத்ததொரு ரோமரிஷி தலைமுறைதானப்பா வாகான பனிரெண்டு தலைமுறைதானாமே
5700.
தலைமுறையாம் மச்சமுனி சாதிபேதம் தண்மையுள்ள கல்லுடையோர் என்னலாகும்
கலையான கோத்திரங்கள் அறுபத்திரண்டு காசினியில் கண்டவரைச் சொல்லலாச்சு
மலையான சட்டமுனி சாதிபேதம் மகத்தான சிங்களவன் என்னலாகும்
சிலையான கோத்திரங்கள் பதினாலாகும் சிற்பரனே கண்டநூல் அறிந்தமட்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக