5571.
இருந்தாரே வெகுகாலம் காலாங்கிநாதர் எழிலான வையகத்து மாண்பர்முன்னே
பொருந்தவே வதிசயங்க ளெல்லாங்கண்டார் பொங்கமுடன் இறந்தவர் கணக்குங்கண்டார்
திருந்தவே யவர்கண்ட கணிதமப்பா தீர்க்கமுடன் எந்தனுக்கு அருளினார்பார்
குருந்தமிழா மாசிரியர் முனிவர்தாமும் கூறவில்லை நூல்தனில் கூறாரின்றே
5572.
இன்றான சாத்திரத்தின் விருப்பமெல்லாம் யெழிலாகப் பாடிவைத்தார் சித்தர்தாமும்
குன்றான மலைபோலே கோடிநூல்கள் கூறினார் வையகத்து வதிசயங்கள்
சென்றதொரு வையகத்து சேதியெல்லாம் சிலருரைத்தார் சிலர்மறைத்தார் தேசமாண்பர்
வென்றிடவே அடியேனும் மனதுவந்து விருப்பமுடன் மறைத்ததெல்லாம் வெளியிட்டேனே
5573.
இட்டேனே காலாங்கி சொன்னநீதி எழில்பெறவே புலிப்பாணி மைந்தாகேளு
பட்டதொரு படுகளத்தின் மாண்பர்சேதி பாரினிலே விதியினால் மடிந்தோர்சேதி
சட்டமுடன் எந்நாயன் காலாங்கிநாதர் சாங்கமுடன் எடுத்துரைத்த தொகையைத்தானும்
வட்டமுடன் நபியுரைத்த தோப்புதன்னில் வளமான வையகத்துத் தொகையுந்தானே
5574.
தானான நபிநாயன் சாத்திரத்தில் சாற்றினார் வெகுகோடி வதிசயங்கள்
கோனான யேசுவின்தன் வேதந்தன்னில் கூறினதோர் வையகத்து மாண்பர்சேதி
பானான பரலோக மடைந்தசேதி பட்சமுடன் அவர்நூலுங் கண்டாராய்ந்து
மானான என்குருவாங் காலாங்கிசுவாமி மார்க்கமுடன் எந்தனுக்கு உரைத்தார்தாமே
5575.
காணவே சீனபதி மாண்பருக்கு கருவாக அடியேனும் மனதுவந்து
தோணவே மூலமென்ற பாஷைதன்னில் திரட்டியதோர் தொகைமுழுதும் யானுங்கண்டு
வேணபடி பதினென்பேர் நூலாராய்ந்து விருப்பமுடன் உபதேசஞ் செய்தேன்யானும்
நீணவே யுந்தனுக்கு யோதவல்லோ நீட்சியுடன் மனதுவந்து எண்ணினேனே
5576.
எண்ணினேன் என்னாயன் காலாங்கிநாதர் எழிலான காயாதி கற்பங்கொண்டு
நண்ணவே சீவியகாலமட்டும் நலமாகக் கிரேதாயி னுகத்திலப்பா
மண்ணிலே மடிந்தவர்கள் கோடிசங்கம் மகத்தான கோடியிலே சங்கமாறு
திண்ணமுடன் மகாசங்க மற்புதங்களெட்டு திடமான வற்புதத்தில் பதினாறுதாமே
5577.
தானான திரேதாயி னுகத்திலப்பா சாற்றுகிறேன் வையகத்தயில் மடிந்தமாண்பர்
மானான லட்சமது நூறுசங்கம் மகத்தான மகாசங்கம் பதினாறுகோடி
தேனான வற்புதங்கள் நாலாறுபத்து தேசத்தில் மாண்டவர்கள் தொகைதானப்பா
கோனான குருவேந்தர் சொன்னநீதி கொற்றவனே தானிருந்த நாள்வரைக்கும்
வானான பராபரியாள் கடாட்சத்தாலே வளமுடனே தானறிந்த தொகையைக்கேளே
5578.
கேளேதான் துவாபரமாம் யுகத்திலப்பா கெடியான மாண்பர்களும் மாண்டசேதி
ஆளேதான் லட்சமது யெண்பத்திரண்டு வழகான சங்கமது எட்டுபத்திரண்டு
கோளேதான் வாராமல் மகாசங்கமேழு கொற்றவனே யற்புதமாகாற் புதங்கண்டு
நாளேதான் வையகத்தில் இறந்தமாண்பர் நலமான தொகையிதுதான் கண்டுகொள்ளே
5579.
கொள்ளவே காலாங்கி இருந்தமட்டும் குவலயத்தில் சமாதிக்கு ஏகுமுன்னே
எள்ளளவு பிசகாமல் முன்னோர்தாமும் எழிலான சாத்திரத்தின் தொகுப்பாராய்ந்து
உள்ளபடி கலியுகத்தி லிருந்தமட்டும் வுத்தமனே மாண்டவர்கள் தொகையைக்கேளிர்
கள்ளவே லட்சமது நாற்பத்திரண்டு கவனமுடன் சங்கமது நாலுமாமே
5580.
நாலான சங்கமது மகாசங்கமெட்டு நலமான அற்புதங்கள் ரெண்டு பத்துநாலு
நூலான மற்றவர்கள் கணக்கையெல்லாம் நுணுக்கமுடன் சித்ரபுத்ரன் கணக்கில்கூறும்
காலான கணக்குவகை யாராற்கூறும் காசினியில் யுகமுடிவில் இருந்தோர்மாண்பர்
பாலான முன்னோர்கள் சொன்னநூலில் பாலித்த கணக்கிதுதான் பண்மைபாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக