பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5621-5630

5621.
உள்ளதொரு வறுகோணம் நடுமையத்தில் வுத்தமனே நாமிருந்து நிர்தஞ்செய்தால்
கள்ளமது வாராமல் சுப்ரமணியர் காட்சியுடன் உந்தனுக்கு வரமேயீவார்
எள்ளளவு குறையாமல் பிரணவந்தான் எழிலான வட்சரத்தை லட்சம்போடு
தெள்ளுமணி பாலகனார் முன்னேநிற்பார் சிவசுப்பிர மணியனெனச் சொல்லலாமே
5622.
செப்பலாஞ் சுப்பிரமணிய னென்பார்பாரு சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை
ஒப்பமுடன் நீநினைத்த சுப்பிரமணியன் ஓகோகோ நாதாந்தக் கடவுளாச்சு
எப்படியும் நாதாந்தக் கடவுளுக்கு எழிலான வவதார புருஷனென்றும்
இப்படியே கோடான கோடிநாமம் எழிலான சாத்திரங்கள் சொல்லலாச்சே
5623.
சொல்லவே யவரவர்கள் தக்கநேர்மை சுந்தரனே தன்மனதில் அயிக்கியங்கொண்டு
வெல்லவே பலவிதமாம் தெய்வம்போலே விசாரணை களில்லாமல் பேதைநெஞ்சாய்
புல்லவே கவிவாணர் கட்டுவாக்கியம் புகழாகப் பலப்பலவாம் நாமந்தன்னை
சொல்லவே நற்கடவு ளென்றுசொல்லி செம்மலுடன் மதிகெட்டுந் துதிப்பார்பாரே
5624.
பாரப்பா பூலோகக் கர்த்தனுக்கு பாங்கான மூன்றுபேர் வகுக்கலாச்சு
நேரப்பா ஹரியென்றும் பிர்ம்மாவென்றும் நெடிதான சாத்திரங்கள் கூறலாச்சு
சீரப்பா நாமமது மூன்றுமல்லோ சிறப்பான கடவுளுக்குப் பேருமாச்சு
தேரப்பா தேசாதி தேசமெல்லாம் செப்பினார் பலநூலுஞ் சொன்னார்தாமே
5625.
சொன்னாரே கடவுளல்லால் வேரொன்றில்லை சுந்தரனே கடவுள்தனைக் காணமாட்டார்
மன்னவனே தெய்வமதைக் காணுதற்கு மகத்தான திருஷ்டாந்திரம் ஏதென்றாக்கால்
தென்னவனே தேவஸ்தானந் தன்னில் திகழான மணியோசை கேட்குமல்லோ
முன்னவனே மணியோசை கேட்கும்போது முனையான மணியொன்று இருக்கலாச்சே
5626.
இருக்கவென்றால் மணியென்ற கருவொன்றுண்டு எழிலான கருவதனைக் கண்டதில்லை
திருத்தமுடன் மணியோசைக் கேட்டபோது திகழான மணியொன்று இருக்கும்பாரு
பொருத்தமுடன் வையகத்தி லதிசயங்கள் பொங்கமுடன் கோடானகோடியுண்டு
வருத்தமுடன் பிறப்பதுவும் பிறப்போர்தம்மை வளப்பமுடன் மழைதனையே கண்டிட்டோமே
5627.
கண்டோமே லோகபதி வதிசயங்கள் காசினியில் வேரொன்று காண்பதேனோ
அண்டமுடன் வுலகுபதிக் கடவுள்தானும் வன்புடனே இருப்பதற்கு ஐயமுண்டோ
உண்டான சாத்திரங்கள் பேதாபேதம் வுத்தமனே பாடிவைத்தார் அனேகமுண்டு
சண்டான முறைமை கெட்டு சாத்திரங்கள் செப்பினார் மாண்பர்தாமே
5628.
மாண்பரா மின்னமொரு மார்க்கங்கேளு மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு
ஆண்மையுள்ள மாடனவன் வசியமப்பா வவனிதனில் யாரறிவார் சித்துமாண்பர்
காண்மையுள்ள கருவாளி யறிவான்பாரு காசினியில் சண்டாளன் சத்துருவேதை
பாண்மையுள்ள கர்மிகட்கும் மர்மிகட்கும் கருவான மாடன் மந்திரமுமாமே
5629.
மந்திரமாம் மாடனது வசியத்தாலே மகத்தான மாண்பரெல்லாம் வசியமாவார்
எந்திரமாம் மாடனதி பிரணவத்தால் எழிலான தேவதைகளெல்லாஞ் சித்தி
தந்திரமாம் மாடனது மந்திரத்தை தண்மையுடன் சொல்லுகிறேன் தயாளபாலா
சுந்தரமாங் கருவறிந்த மாந்தரப்பா சூட்சமுடன் செய்வான்பார் மர்மிதானே
5630.
தானான பிரணவங்கள் ஏதென்றாக்கால் தண்மையுள்ள ஹரிஓம் கேளென்றபோது
கோனான அகோரமடா கம்பீராயா குறிப்பான அகோரதர்க்க வாழ்முனீசா
தேனான சிங்கார பகவதிபுத்திரா தெளிவான வீராதி வீரமாடா 
வானான மசானமென்ற சுடலைமாடா மகத்தான என்வார்த்தை கேட்டிட்டாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக