5711.
பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாலகனே புலிப்பாணி மைந்தாகேளு
நேரேதான் வியாசருட மரபேதென்றால் நேர்பாக சந்திரகுல ஜாதியாகும்
சீரேதான் தலைமுறைகள் எண்பதாகும் சிறப்பான புராணவகை கூறும்வாறு
ஆரோதான் சாத்திரங்கள் அறியாமற்றான் வப்பனே கட்டிவைத்தார் கோடியாமே
5712.
கோடியாந் தேரையர் மரபேதென்றால் கொற்றவனே யானுரைப்பேன் கண்டமட்டும்
நீடியே பிரம்மகுல மென்னலாகும் நெடிதான காப்பியங்கள் கூறும்வண்ணம்
ஆடியதோர் தலைமுறைகள் ஏதென்றாக்கால் வப்பனே நவதசமு மென்னலாகும்
பாடியதோர் ரிஷிதேவர் முனிதேவர்தாமும் பண்பாகத் தாமுரைத்தார் பான்மைதானே
5713.
பாண்மையாம் யாக்கோபு மரபேதென்றால் பாங்கான குலம்விட்டு குலம்புகுந்தோர்
மேன்மையாம் முன்சொன்ன ராமதேவர் மெய்யான குலமென்றே சொல்லலாகும்
தேன்மாரி பொழிகின்ற மச்சுதேசம் சென்றல்லோ பெயர்மாறி வுருவுகொண்டார்
வான்மீது வருந்துதிபோல் உதிக்குந்தீரன் மகத்தான ராமதேவர் என்னலாமே
5714.
என்னவே ராமதேவர் என்னலாகும் எழிலான தலைமுறைகள் பதினாறாகும்
மின்னவே நாமமது ரெண்டேயாகும் மிக்கான சாத்திரங்கள் சொன்னவாறு
உன்னிதமாய்ப் பலமுனிவர் சித்துதாமும் வுத்தமனே தாமுரைத்தார் மறைப்போமெத்த
நன்னயமாய்ப் பலநூலுங் கண்டாராய்ந்து நலமுடனே ஜாதிபேதம் வுரைத்தேன்பாரே
5715.
பாரப்பா கொங்கணரின் மரபேதென்றால் பாங்கான யாதவ குலமேயாகும்
ஆரப்பா தலைமுறைகள் என்னசொல்வேன் வப்பனே ஈரெட்டுப் பதினாராகும்
நேரப்பா வவர்சொன்ன காண்டந்தன்னில் நேர்மையுடன் மரபதுவுஞ் சொல்லவில்லை
ஊரப்பா பலபேருங் கூடியல்லோ வுத்தமனே தாமுரைத்தார் ஜாதிதானே
5716.
ஜாதியா மின்னமொரு மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
ஆதியாம் தட்சணா மூர்த்தியப்பா வப்பனே யவர்மரபு யாதென்றாக்கால்
நீதியாங் கவுண்டனென்ற மரபேயாகும் நிஷ்களங்க மானதொரு மூர்த்தியென்பார்
சோதிடமாம் பலநூல்கள் ஆராய்ந்தேதான் சொன்னதொரு மொழியதுவும் மெய்யதாமே
5717.
மெய்யான தலைமுறைகள் பதிமூன்றாகும் மிக்கான சாத்திரத்தில் உரைத்தவாறு
துய்யவே கோரக்கர் மரபேதென்றால் துப்புரவாய் மாராட்டியனார் என்னலாகும்
பையவே தலைமுறைகள் பதினொன்றாகும் பாங்கான சாத்திரத்திற் சொன்னவாறு
வெய்யவே வேதமுனி சித்துதாமும் வெகுநூல்கள் ஆராய்ந்து பார்த்தார்தானே
5718.
தானான இன்னமொரு மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி கண்ணேயப்பா
கோனான கௌபால ராணிக்கோர்வை கொற்றவனே பாடிவைத்தா ருண்மையாக
மானான வவர்மரபு யாதென்றாக்கால் பாங்கான பப்பரவர் மரபேயாகும்
மானான தலைமுறைக ளெட்டேயாகும் மகத்தான பெருநூலில் சொன்னார்பாரே
5719.
சொன்னாரே ஜோதிமா முனிவரப்பா துப்புரவாய் ஆணியென்ற கோர்வைசெய்தார்
தென்னான தட்சணா பதியிலப்பா தேற்றமுடன் மலைதனிலே யிருக்குஞ்சித்து
பன்னவே மரபதுவும் ஏதென்றாக்கால் பாங்கான பள்ளனென்றே செப்பலாகும்
உன்னிதமாய் தலைமுறைகள் ஆறேயாகும் வுற்பனமாய் ஓதிவைத்தார் நூலில்தாமே
5720.
நூலான நூல்தனிலே சொன்னமார்க்கம் நுணுக்கமுடன் வெகுகோடி சொன்னாரப்பா
பாலான டமரகர் மரபேதென்றால் பாங்கான மரவரென்றே செப்பலாகும்
தாலான தலைமுறைகள் நாலேயாகும் தாக்கான வவர்நூலில் சொன்னவாறு
பாலான மொழிபோலே முனிவர்தாமும் பாடிவைத்தார் பட்சமுடன் பாரில்தானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக