பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5551-5560

5551.
பாரப்பா இன்னமொரு கருமானங்கேள் பாலகனே சொல்லுகிறேன் மைந்தாபாரு
நேரப்பா வையகத்தில் கோடிவித்தை நேர்மையுடன் கண்டதுண்டு பார்த்தோருண்டு
சீரப்பா இதிகாச வித்தையெல்லாம் சிறப்புடனே சித்தர்முனி மறைத்துவைத்தார்
ஆரப்பா யெனைப்போலே சொல்வாருண்டோ வப்பனே கண்டவரை வுரைத்திட்டேனே
5552.
உரைத்தேனே வையகத்து மாண்பருக்கு ஓகோகோ நாதாக்கள் சொன்னதில்லை
நிரைத்திடவே கருமான வித்தையப்பா நீதியுடன் பேர்கூறி வேர்பிடுங்கும்
கரைத்திடவே பிரணவத்தை மாறல்செய்து கருவுடனே பேர்மாறி வேர்பிடுங்கி
சிரைத்திடவே பூண்டுக்குக் காப்புகட்டி சீர்பெறவே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
5553.
பண்பான வாரமது ஆதிவாரம் பகலான வுச்சியது மத்தியானம் 
திண்பான வுருவமது நடுச்சாமந்தான் திகழான மூலிக்குக் காப்புகட்டி
நண்பான எதிராளி பேரைக்கூறி நயம்படவே வங்சிங்யங் கென்றோது
கண்ணான மனோன்மணியாள் பீஜமந்திரம் கருவான லட்சம்வுரு போடுபோடே
5554.
போடப்பா தேவிமனோன்மணியாள் பீஜம் பொங்கமுடன் வுருவனைத்துந் தீர்ந்தபின்பு
நீடப்பா மாந்திரீக தாந்திரீகத்தால் நிலையான வாத்தமது கபாலஞ்சொக்கி
கூடப்பா சுவாசமது வுள்ளேபுக்கி குவலயத்தில் செத்ததொரு சவத்தைப்போலும்
ஆடப்பா பிரணவத்தின் மகத்துவத்தால் வப்பனே சவம்போல செய்திடாயே
5555.
செய்யவென்றால் நாவேது பாவுமில்லை ஜெகதலத்தில் உனைப்போல சித்துமுண்டோ
பையவே கர்மியென்ற எதிராளியப்பா பாருலகில் உன்மீதில் பகையுமில்லை
மெய்யான எத்தனங்கள் யாதொன்றில்லை மேதினியில் இருந்தென்ன பயனுமில்லை
துய்யதொரு வாத்மாவுஞ் சொக்கியல்லோ துப்புரவாய் பிரேதம்போல் இருப்பான்தானே
5556.
தானான பகையாளி தன்னையப்பா தயவுடனே மறுபடியும் பெயரைமாற்றி
கோனான மூலியிட சாபம்நீக்கி கொற்றவனே எதிராளி பகைவன்தன்னை
தேனான யிலையமுர்தங் காப்புநீக்கி தேற்றமுடன் வுருவுதனை மாறியல்லோ
பானான பராபரியை ஸ்தோத்தரித்து பட்சமுடன் காப்பாற்றல் தருமமாமே
5557.
தருமமாம் உந்தனுக்குக் கீர்த்தியுண்டு தண்மையுள்ள ராஜசிவ ராஜயோகா
தருமத்தை எந்நாளும் நிவர்த்திசெய்து காப்பாற்றல் மனுதர்ம நீதியாகும்
சொரூபமென்ற நிலையதனைக் காண்பதற்கு சூட்சாதி சூட்சமதை யறிந்துகொள்ளு
கிருபையது யுந்தன்மேல் வருவதற்கு கீர்த்தியுடன் எந்நாளும் பதங்கொள்வீரே
5558.
கொள்ளவே இன்னமொரு மார்க்கம்பாரு கூறான புத்தியுள்ள மைந்தாகேளு
வெள்ளமது நிறைந்திருக்கும் கால்வாய்தன்னில் வெட்டவெளி வனாந்திரத்தில் சாரலோரம்
தெள்ளுதமிழ் வேளாளர் குடியனைத்தும் தேற்றமுடன் காய்கரிகள் அனந்தவர்க்கம்
உள்ளபடி பரதெய்வ சாட்சியாக வுத்தமர்கள் பயிரிடுவர் கோடிதாமே
5559.
கோடியாங் காய்கரிகள் பழவர்க்கங்கள் குவலயத்தில் மாண்பரெல்லாம் பயிரேசெய்வார்
நீடியே வெகுநாள்கள் பயிர்கள்பக்கல் நேர்மையுடன் போகாம லிருப்பதுண்டு
கூடியே கறுப்பண்ணன் காவல்வைத்து கொற்றவனே தாமிருப்பார் மாளிதன்னில்
தேடியே வையகத்தில் சிலதுமாண்பர் தெரியாமல் கனிவர்க்கம் தீண்டுவாரே
5560.
தீண்டியே பொசிப்பதற்கு எண்ணங்கொண்டு திருடியே கன்னமிட மனதிலெண்ணி
வேண்டியே பேராசைக் கொண்டுமல்லோ விருப்பமுடன் கனிவர்க்கங் காய்கள்தம்மை
காண்பமாய்த் தோட்டமது வருகிற்சென்று காய்களைத்தான் தொட்டுமல்லோ கொள்ளை கொண்டோர்
பாண்டியனார் கறுப்பண்ண சாமிதானும் பட்சமுடன் தொட்டவரை பிடிப்பார்தாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக