5631.
கேட்கவென்றால் உத்திரவின் மாடாகேளு கெடியான என்வார்த்தைக் கைவிடாதே
தாட்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணியாள்பாதம் தயங்காமல் முன்னின்று கார்க்கவென்று
வேட்கையுடன் கிருபையருள் வினோதமாடா வீறான ரீங்சௌவுங் கிளியென்றோது
சூட்சமுடன் மய்ஐயுங் கிளியென்றோது சுடறான ரீங்குடனே வாவாவென்றோதே
5632.
ஓதையிலே லட்சமது வுருவுபோடு ஓங்கார மிட்டல்லோ வசியமோது
நீலமுடன் ரீங்கார சப்தவோசை நிலையான அஷ்டசித்துக் கிதுவேமூலம்
போதமுடன் மாடனது பிரணவத்தால் பொங்கமுடன் முப்பத்தி ரண்டுபூதம்
தோகமுடன் மாந்தருக்குள் வசியமாச்சு தொல்லுலகில் இப்படியே பிழைப்பார்காணே
5633.
காணவே ஜெபதபத்தி லிருந்துகொண்டு கருவான பிரணவத்தை வுச்சரித்தால்
பூணவே ஏவல்பில்லி சூனியங்கள் பொல்லாத கறுப்பண்ணன் யேவல்சண்டி
தோணவே பாவாடை ராயன்காத்தன் தோறாத பிரணவத்தால் எல்லாஞ்சித்தி
வேணதொரு மாடனது வசியத்தாலே வெட்டவெளி தேவதைகள் கைக்குள்ளாச்சே
5634.
ஆச்சப்பா மந்திரமாம் மூலமந்திரம் வப்பனே கண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
மூச்சடங்கிப் போனதொரு பிசாசுதந்திரம் முனையான பிரணவத்தால் பேசலாகும்
கூச்சலுடன் தலைசுழட்டி யாடும்பேய்கள் கொப்பெனவே பிரணவத்தை கண்டாலோடும்
ஆச்சரிய மானதொரு மாடன்மந்திரம் வப்பனே போகரிஷி வசனித்தேனே
5635.
வசனித்தேன் லோகாதி மார்க்கந்தன்னை வளமுடனே கண்டறிந்த ஞானவான்கள்
நிசமென்று நம்பார்கள் பசாசுமார்க்கம் நிலையான ஜெபத்தினால் தவத்தினாலும்
தசமதுவாய் லட்சமது வுருவுகொள்ள தாரணியில் காலமென்ற மரணத்தாலே
வசமுடனே மடிந்ததொரு வாத்மந்தானும் வளமான எந்திரத்தி லடக்கமாமே
5636.
அடக்கமாஞ் சூனியங்கள் எல்லாம்பொய்யாம் வப்பனே கருவதனால் வெல்லலாகும்
திடமுள்ள செம்பதத்தில் எல்லாஞ்சித்தி தாக்கமுடன் ஜெபத்தினால் வசியமாகும்
மடலான மாடனது மந்திரத்தால் மகத்தான முடிமன்னர் வசியமாவார்
கடல்போன்ற மாந்திரீக மெல்லாமப்பா கருவான மாடனுக்கு ஈடாகாதே
5637.
ஈடான மார்க்கமது யின்னஞ்சொல்வேன் யெழிலான புலிப்பாணி மைந்தாகேளு
நாடான தேசமது நாடுவிட்டு நாதாந்தக் காலாங்கி கிருபையாலே
தாடாண்மை கொண்டல்லோ குளிகைபூண்டு தகமையுடன் சீனபதி விட்டுயானும்
காடான மலைகுகைகள் வனாந்திரங்கள் கருவான வழியதுவுங் கடந்தேன்பாரே
5638.
பாரேதான் மலையாள தேசங்கண்டேன் பாங்கான பெண்கள் மலையாளமப்பா
நேரேதான் குளிகைவிட்டு கீழிறங்கி நேர்மையுடன் பகவதியாள் தேவஸ்தானம்
சேரேதான் தூமாதேவி கோயிலப்பா சிறப்பான தோப்புகளும் மடுவுங்கண்டேன்
தீரேதான் மடுவதனில் இறங்கியானும் தீர்க்கமுடன் ஸ்நாணமது செய்தேன்பாரே
5639.
பாரப்பா தூமாதேவி தேவஸ்தானம் பாங்குடனே தோப்பருகில் இருக்கக்கண்டேன்
நேரப்பா கன்னிகளோ வாயிரம்பேர் நேர்மையுடன் பச்சைபல்லாக்கு கொண்டு
சீரப்பா தூமாதேவி தன்னைத்தானும் சிறப்புடனே பல்லாக்கு சாரிகொண்டு
ஊரப்பா காவனத்தை சுற்றியல்லோ வுத்தமனே கன்னிகளும் வருவார்தாமே
5640.
வருகுவதும் போகுவதும் சேர்வைகண்டேன் வளமான தூமதா தேவிதன்னை
குருவான தேவதையைக் காணவென்று குடிலமுடன் கன்னிமார் பெண்களைத்தான்
திருவான காவணத்தே யடியேன்தானும் திறமுடனே சுத்திவந்து காணும்போது
குருவான சித்தொருவர் அங்கிருந்தார் கொற்றவனே யடியேனுங் கண்டிட்டேனே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக