5331.
ஆமேதான் லிங்கமது பலமைந்தாகும் வப்பனே எரிகாலன் பாலாலாட்டி
தாமேதான் கோளாறு நேரிடாமல் காட்சியுடன் ரவிதனிலே காயப்போடு
வேமேதான் மறுபடியும் பொடியாய்ச்செய்து விருப்பமுடன் செய்யுமந்த முறைமைக்கேளு
நாமேதான் மதியதுவுந் துலமுறாம் நன்மையுடன் செய்யுகின்ற வரிசைகேளே
5332.
கேளப்பா வெள்ளிதனை குகையிலிட்டு கெவனமுடன் வுருக்கியல்லோ செப்பக்கேளு
தூளப்பா முன்சொன்ன மருந்தையல்லோ துப்புரவாய்க் கிரசமது யீவாய்தானும்
நாளப்பா போகாமல் மூசைதன்னை நலம்பெறவே வுடைத்துப்பார் களங்கேயாகும்
பாளப்பா போகாமல் களங்குதன்னை பட்சமுடன் தானெடுத்து செப்பக்கேளே
5333.
செப்பவென்றால் நாவில்லைப் பாவுமில்லை ஜெகந்தனிலே ரசிதமென்ற குளிகையாச்சு
ஒப்பமுடன் குளிகைதனை யெடுத்துப்பூபா வுத்தமனே கலசமதில் சூதமிட்டு
தப்பிதங்கள் நேராமல் சூதந்தன்னில் தகமையுடன் குளிகைதனை கலசத்திலிட்டு
ஒப்பனையாம் வாய்மூடி சீலைசெய்து வுத்தமனே நெருப்பதனிற் காச்சிடாயே
5334.
காச்சியே கலசமதைத் திறந்துபாரு கனமான சூதமது வெண்ணைப்போலாம்
ஆச்சரிய மானதொரு சூதவித்தை வப்பனே யாரறிவார் மாண்பரப்பா
கூச்சலுடன் தானொடுங்கி சூதந்தானும் கொற்றவனே கீழ்நிற்கும் வெண்ணெய்தானும்
பாச்சலுடன் குளிகையது மேலேநிற்கும் பண்பான குளிகைதனை பதனம்பண்ணே
5335.
பண்ணவென்றால் சூதவெண்ணெய் தானெடுத்து பட்சமுடன் காந்தமென்னும் மூசைதன்னை
எண்ணவே தானடைத்து சீலைசெய்து யெழிலாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு
நண்ணவே வானத்து மீன்தானப்பா நலமான வெள்ளியது என்னசொல்வேன்
திண்ணமுடன் வெள்ளிதனை சிவயோகஞ்செய்து சித்தனைப்போல் தானிருந்து வருந்திடாயே
5336.
அருந்தவே வருமைவருங் காலந்தன்னில் வப்பனே சிவயோகம் வாறியுண்ண
திருந்தவே யொருவரை பேசவேண்டாம் தீரமுடன் சினமதுவுங் கைக்குள்ளாச்சு
பொருந்தவே தனக்குகந்த சீஷன்தேடி பொங்கமுடன் குணங்கண்டு குறியுங்கண்டு
மருந்தினிட கைபாகஞ் செய்பாகத்தை மன்னவனே யவன்தனக்கு போதிப்பாயே
5337.
போதித்து வெகுகாலஞ் சென்றபின்பு பொங்கமுடன் வுள்ளுளவும் மிகவேயோதி
சாதித்து வுபதேசங் கூர்ந்துமைந்தா சட்டமுடன் சின்மயத்தி லிருந்துகொண்டு
ஆதித்தன் சந்திரனு மறியாமற்றான் அப்பனே தன்மனதில் ஒடுக்கமாகி
சாதித்து வாதமென்ற வித்தைதன்னை சட்டமுடன் கார்த்திருந்து சாதிப்பாயே
5338.
சாதிப்பாய் நல்லோர்கள் தீயோருண்டு சற்பனைகள் கண்டல்லோ மிகவாராய்ந்து
வாதியாந் தெரிந்தவர்போல் வாதுபேசி வந்துன்னைத் தடுத்தல்லோ தர்க்கம்பேசி
நீதியாய் நூல்தெரிந்த நிபுணனைப்போல் நிஷ்டூர முனைப்பேசி நிகழ்த்துவான்பார்
பார்வதியை சடையணிந்த தம்பிரான்போல் வேஷம் போட்டல்லோ பகட்டுவாரே
5339.
பகட்டுவார் அவர்வலையில் சிக்கவேண்டாம் பாருலகில் வெகுகோடி கவலையோடும்
முகமதுவின் முன்னின்று நீதிபார்த்து முனையான ராசிமுத லுறவுகண்டு
இகபரமு முள்ளளவும் வையகத்தில் யெழிலாக சீஷனென்றே வுருதிகொண்டு
சகமுழுதும் சதாகால முன்னையப்பா சட்டமுடன் துதிக்கும்வழி தேடிக்கொள்ளே
5340.
கொள்ளவென்றால் இன்னமொரு மார்க்கங்கேளு கொற்றவனே சரக்கதுதான் செப்பக்கேளு
விள்ளவே பூரமது வொன்றேயாகும் வித்தகனே வீரமது வொன்றேயாகும்
மெள்ளவே சூதமது வொன்றேயாகும் மேன்மையுடன் கெந்தியது வொன்றேயாகும்
உள்ளபடி லிங்கமது வொன்றேயாகும் வுத்தமனே கெவுரியது வொன்றுகூட்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக