பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5561-5570

5561.
தாமான பழவகைகள் தொட்டபேர்கள் தகமையுடன் கறுப்பண்ணன் காவல்தன்னால்
பூமான்கள் அதிகார வார்த்தையாலே புகழாக தொட்டதொரு கரத்தைத்தானும்
சாமானிய மானதொரு கறுப்பன்தானும் சட்டமுடன் கைதனையே பிடித்திழுப்பான்
வேமான மாகவல்லோ வெகுநாளாக விருப்பமுடன் காயருகில் நிற்பார்காணே
5562.
காணவே புலிப்பாணி மைந்தாகேளு கருவான மாண்பரெல்லாம் தொழிலேசெய்வார்
பூணவே காவலாளி யாரென்றாக்கால் புகழான கறுப்பண்ண சாமியாகும்
தோணவே வீரியனாங் கார்த்தராயன் தோறாத ஜின்னுதே வதையுந்தானும்
ஆணவமாங் காளியென்ற துர்க்கைதானும் அடைவான கானகத்தில் காவலாச்சே
5563.
ஆச்சப்பா யின்னமொரு மகிமைகேளு அடவான பயிரிடுங் குடியாளர்க்கு
மூச்சடங்கிப் போனதொரு கிரகந்தானும் முக்கியமா யேவலுக்கு முன்னேநின்று
பாச்சலுடன் பில்லியென்ற பிசாசுதானும் பாலகனே பிரணவத்தால் உச்சாடித்து
ஏச்சது வாராமல் மாண்பரெல்லாம் யெழிலாகக் கைவசஞ்செய் திருக்காரே
5564.
இருக்கிறதோர் பிசாசியின் தந்திரத்தால் யெழிலான மந்திரங்கள் மெய்யேயாகும்
மருட்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணித்தாய் மகத்தான வட்சரத்தை யோதுவார்கள்
இருட்கடலை முறுக்கிய சற்றிரவிபோலும் யெழிலுருவங் காட்டும் ஒளிவட்டம்போலும்
அருட்கடலாம் ஈஸ்வரியா ளட்சரத்தால் அவனிதனில் தாந்திரீகஞ் செய்வார்பாரே
5565.
பாரேதான் மூலிக்குக் காப்புகட்டி பாங்கான பிசாசுவகை கைவசமேயானால்
நேரேதான் வுலகுதனில் திருடுமாண்பர் நேர்மையுடன் வாய்பேசா கையாடாமல்
சீரேதான் இவ்விதமாய் இருப்பாயானால் சிறப்பான கீர்த்தியது லபிக்கும்பாரு
ஆரோதான் வையகத்தில் புத்திமான்கள் அவனிதனில் மாந்திரீகஞ் செய்வார்பாரே
5566.
பாரென்று சொல்லியல்லோ பாரில்தன்னில் பலவிதமாம் வார்த்தையது கூறுவார்கள்
நேரென்று பசாசினது மந்திரத்தால் நேர்த்தியுடன் காவலது செய்வார்பாரு
வேரொன்று மில்லையப்பா எதிராளிபேரில் வியர்வான பசாசினது தந்திரந்தான்
ஆரொன்று மாண்பர்களும் வையகத்தில் அனியாயஞ் செய்வதற்கு முடியாதன்றே
5567.
முடியாது மூலியுட சாபமந்திரம் முக்கியமாய் பேயினுட வட்சரந்தான்
குடியான மாண்பரெல்லாம் வையகத்தில் கொற்றவனே ஏவலுக்கு முன்னதாக
மிடியான வருத்தமது தன்னோடொக்க மேதினியில் கருவிகர ணாதியோடும்
துடியான மாந்திரீகம் தாந்திரீகத்தால் துப்புரவாய் மாண்பரெல்லாம் பிழைப்பார்தானே
5568.
தானான யிவ்வகையாம் வண்ணமெல்லாம் தகமையுடன் தட்சனத்தார் செய்யும்வேதை
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
பானான வித்தையது பழுதுபோகா பாரினிலே வெகுகோடி வதிதஞ்சொன்னார்
மானான மகாசங்க வித்தைசொல்வேன் மகத்தான வையகத்தோர் மாண்டோர்தானே
5569.
தானான புலிப்பாணி மைந்தாகேளு தண்மையுடன் என்குருவாங் காலாங்கிநாதர்
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேசமெல்லாங் குளிகைகொண்டு சென்றபோது 
கோனான குருதனக்கு வயதுசொல்வேன் கொற்றவனே முந்நூற்றப் பதினைந்தாகும்
பானான வாண்டுமது வஞ்சேயாகும் பாங்கான வாண்டுக்கு வறுபதாமே
5570.
ஆமேதான் வறுபதுவும் யென்றவாக்கு வப்பனே தலைமுறைதான் ஒன்றேயாகும்
கோமான்கள் ஓராண்டு இருந்ததில்லை கொற்றவனே தேகமதை மெய்யென்றெண்ணி
வேமேதான் முந்நூறு வாண்டுசொச்சம் வேதாந்தத் தாயினது கிருபையாலே
தாமேதான் முந்நூறு வானமட்டும் தகமையுடன் காலாங்கி இருந்திட்டாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக