5321.
காண்பாயே யிந்தமுறை பத்துவிசையோடு களிப்பான செம்பதுவும் வூறலற்று
ஆண்பான வல்லிமலர் போல்நிறந்தான் வப்பனே சுந்தரா யென்னசொல்வேன்
வீண்போகா திந்தமுறை செய்துமல்லோ விருப்பமுடன் முன்சொன்ன செந்தூரத்தை
நாள்படவே ரவிதனையே யுருக்கிக்கொண்டு நலம்பெறவே செந்தூரம் பத்துக்கொன்றே
5322.
ஒன்றான செந்தூர மென்னசொல்வேன் உத்தமனே பத்துக்கு ஒன்றேயீந்து
குன்றான செம்பொன்றுங் கூடச்சேர்த்து கொற்றவனே வாரடித்துப் புடத்தைப்போடு
வென்றிடவே சொகுசாவின் கடைதானப்பா வித்தகனே சிவவேடம் பூண்டோர்க்கெல்லாம்
நன்றான கவசகுண் டலத்துக்காதி நாயகனே என்னசொல்வேன் வதீதம்பாரே
5323.
பாரேதான் முன்சொன்ன செந்தூரத்தை பட்சமுடன் செய்வதற்கு மைந்தாகேளு
சீரேதான் மதியுப்பு சீனத்தோடு சிறப்பான வுமருப்புக் கூடச்சேர்த்து
நேரேதான் வாயென்ற பாத்திரத்தில் நெடிதான செயநீரால் இறக்கிமைந்தா
நீரேதான் சீசாவில் அடைத்துக்கொண்டு நிகழான செந்தூர மரைப்பாய்தானே
5324.
தானான செயநீரின் போக்கைத்தானும் தண்மையுள்ள நாதாக்கள் சொன்னதில்லை
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த முறைப்பாடெல்லாம்
பானான வையகத்தோர் பிழைக்கவென்று பாருலகில் பாடிவைத்த குருநூலாகும்
வேனான சாத்திரத்தின் வுளவாராய்ந்து விட்டகுறை யிருந்தோர்க்கு லபிக்கும்பாரே
5325.
பார்க்கவென்றால் இன்னமொரு கருமானம்பார் பாடுகிறேன் புலிப்பாணி மைந்தாகேளு
தீர்க்கமுடன் பேரண்டந் தலையண்டந்தான் திறமான ஓடதுவும் கொண்டுவந்து
ஆர்க்கவே வெடியுப்புக் கூடச்சேர்த்து வப்பனே மூலிகையின் செயநீர்தன்னில்
ஏர்க்கவே நாற்சாமம் அரைத்துபாலா யெழிலாக வில்லைதட்டி காயவையே
5326.
காய்ந்தபின்பு தனையெடுத்து ஓட்டிலிட்டு கசகாமல் சீலையது வலுவாய்ச்செய்து
தோய்ந்துமே வராகமென்ற புடத்தைப்போடு துப்புறவாய்ப் புடமாறி எடுத்துப்பாரு
மாய்ந்துமே வெடியுப்புச் சத்துருவுஞ்சேர்ந்து மகத்தான பற்பமது யென்னசொல்வேன்
தீய்ந்ததொரு பற்பமதை யெடுத்துமைந்தா திறமான சீசாவிற் பதனம்பண்ணே
5327.
பண்ணவே ரவிதனையே யெடுத்துநீயும் பான்மையுடன் தானுருக்கி ராசமீவாய்
எண்ணவே செம்புக்கு பாதியீவர் யெழிலான பற்பமதை யென்னசொல்வேன்
உண்ணவே சோறுதின்ன வேண்டுமென்றால் வுத்தமனே செம்புசுத்தி போதாதேதான்
வண்ணமுடன் செம்பதனை யுருக்கிமைந்தா மகதேவர் கவசகுண்டலஞ் செய்வாயே
5328.
செய்யவே சிவயோகி வேடம்பூண்டு தேசத்தோர் நண்பருக்கு யிந்தவேதை
உய்யவே தான்கொடுக்க மனுதர்மமாகும் வுத்தமனே சமுசாரிக்கான வித்தை
துய்யதொரு செம்புவித்தை யிதுதானப்பா துப்புரவாய் கலசகுண்ட லத்துக்காதி
பையவே யுந்தமக்கு வுபதேசிப்பேன் பாங்குபெற கர்மிகட்கு சொல்லாரன்றே
5329.
சொல்லான சொல்லிதுதான் சிவவேடந்தான் துப்புரவா யிருப்போர்க்கு ஈயநன்று
புல்லான மாண்பர்களில் தர்மிகளுமுண்டு புகழான தருமிகட்கு ஈயநன்று
கல்லான கருமிகளுக்கு கொடுக்கலாகா கபடன்றி மெய்சொல்வோர் குடுக்கநன்று
வல்லதொரு சித்துமுனி வேதையப்பா வளமையுடன் செய்பவர்க்கு சித்தியாமே
5330.
சித்தியா மின்னமொரு பாகஞ்சொல்வேன் சிறப்பான நாதாக்கள் சொன்னதில்லை
முத்திபெற கடுகளவு ரசமேநின்றால் முனையான மோசமது பெறவேயாகும்
சத்திசிவம் சூதமதிற் காணலாகும் தாரிணியில் கண்டவனே வாதியாவான்
வெற்றிபெற கெந்தகமும் பலமைந்தாகும் விருப்பமுடன் பூநாகம் பலமைந்தாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக