5541.
காண்பிக்க யடியேனும் மனதுவந்து கருத்துடனே மாண்பர்களைக் கேட்டபோது
வீண்பான சிறுபால போகநாதா விட்டகுறை யிருந்ததினால் இங்கேவந்தாய்
ஆண்மைகொண்டு வந்ததினால் உந்தனுக்கு வப்பனே சாபமது தருவோமென்றும்
தீண்பான வாக்கினைகள் செய்வோமென்றும் திறமையுடன் எந்தன்பேர் கேட்டிட்டாரே
5542.
கேட்கவே யடியேனும் பிரமைகொண்டு கெவனமுடன் காலாங்கி சீஷனென்றேன்
மீட்கவே யடியேனுங் குளிகைபூண்டு மேதினியெலாம் சுற்றியிங்கே வந்தேன்
காட்கவே விலாடபுரங் காணவென்று தகமையுடன் போர்களத்தில் வந்தேனப்பா
ஆட்கொண்டு யெந்தனையு மாசீர்மித்து வன்புடனே பாதுகாக்க வென்றிட்டேனே
5543.
இட்டேனே மாண்பர்களைக் கண்டுயானும் எழிலான வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
அட்டதிசை தான்புகழும் அதர்வனத்தை அன்புடனே எந்தனுக்கு வோதினார்கள்
சட்டமுடன் பிரணவத்தின் தழைகள்பூண்டு தாக்கான மரந்தனிலே காப்புகொண்டு
விட்டதொரு யெதிராளி பேரைமாறி விருட்சமென்ற மூலிதனில் காண்பித்தாரே
5544.
காண்பித்தார் விலாடபுரந் தன்னிலப்பா தண்மையுள்ள போர்க்களத்தில் அதிகமாண்பர்
ஆண்மையுடன் எதிராளி பேரைச்சொல்லி அங்ஙனவே மாந்திரீக பிரணவத்தால்
வீண்பழிக்கு யாளாகா வாகாமற்றான் விட்டகுறை இருந்ததொரு சாபத்தாலே
நீண்படவே மாந்திரீக தாந்திரீகத்தால் நிலையான போர்க்களத்தை வென்றிட்டாரே
5545.
வென்றாரே மூலியிட விருட்சத்தாலே வேகமுடன் கோடான கோடிபேரை
சென்றதொரு வித்தைகளை எந்தனுக்கு சிறப்புடனே போதித்து வதிதஞ்செய்தார்
குன்றான கோடிவித்தை யானுங்கண்டு கொற்றவனே குளிகையது பூண்டுகொண்டு
தன்றான கருமான வித்தையெல்லாம் தகமையுடன் தானறிந்து வந்தேன்பாரே
5546.
பாரேதான் இன்னமொரு கருமானங்கேள் பாங்கான புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் உந்தனுக்குத் தீங்குசெய்த நேரான கருமிகட்கு இந்தபாகம்
தூரேதான் இருந்தாலும் அஞ்சவேண்டாம் துப்புரவாய் குடிகெடுக்கும் பாவிதன்னை
சீரேதான் பிரணவத்தின் மூலியாலே சீர்பதத்தை மாற்றியல்லோ பேர்தான்கொள்ளே
5547.
கொள்ளவே எதிராளி பேரைக்கூறி கொற்றவனே நெல்லிக்குக் காப்புகட்டி
விள்ளவே யவன்பேரைத் தலைகீழாக விருப்பமுடன் மனோன்மணியாள் அட்சரத்தை
உள்ளபடி வங்சிங்யங் கென்றபோது வுத்தமனே லட்சமது வுருவுகொண்டு
தெள்ளுதமிழ் பாவாணர் சித்தர்வாக்கு தேசமதிற் பொய்யாது மெய்யாம்பாரே
5548.
மெய்யான பிரணவத்தின் மூலியாலே மேதினியில் பிணம்போலே இருப்பான்பாரு
பையவே யவர்சென்று எதிராளிதன்னை பட்சமுடன் தானழைத்து வருந்திட்டாலும்
துய்யவே சவம்போலே இருப்பான்பாரு துப்புரவாய் வையகத்தைத் தான்மறந்து
உய்யவே பஞ்சபூதங்க ளெல்லாம் ஒடுக்கமுடன் தானொடுங்கி இருப்பான்தானே
5549.
தானான யேவல்தொழில் வொன்றுமில்லை தண்மையுள்ள பூலோக வாசையில்லை
கோனான கோவேந்தர் போருமில்லை கொற்றவர்க்கு எதிராளி படையுமில்லை
தேனான மாந்திரீக தாந்திரீகத்தால் தேசமெங்கும் ஜெயிப்பதற்கு ஐயமில்லை
பானான பாவமென்ற தொழிலுமில்லை பாருலகில் இவ்வேதை பண்பாய்ச்செய்யே
5550.
பண்பான வேதையினால் அஷ்டசித்தி பாருலகில் செய்வதற்கு ஐயமில்லை
நண்பான மூலிதனி லனந்தம்வேதை நாட்டினிலே செய்துமல்லோ கீர்த்திகொண்டு
திண்மையுடன் செய்தல்லோ வையகத்தில் தீர்க்கமுடன் கருமிகளை வெல்லலாகும்
வண்மையாம் மூலியிட போக்கனந்தம் வையகத்தில் கோடியுண்டு செய்வார்பாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக