5641.
கண்டேனே சித்துமகா புருஷர்தம்மை கருவான சித்தொளிவு மென்னைக்கண்டார்
அண்டமதில் குளிகைகொண்டு யிறங்கிவந்த வப்பனே சிறுபாலா யாரென்றார்கள்
தெண்டமுடன் அடியேனும் முடிவணங்கி தேற்றமுடன் காலாங்கி சீஷனென்றேன்
சண்டமா ருதம்போல குருசித்துதாமும் தண்மையுடன் மனதுவந்து சிரித்திட்டாரே
5642.
சிரித்துமே குருபரனார் என்னைப்பார்த்து சிற்றின்ப சிறுபாலா கேளுகேளு
திரிவான துவாபர யுகத்திலப்பா திகழுடனே காலாங்கி யடியேன்தானும்
பரிபோகச் சினேகிதராய்க் குளிகைபூண்டு பாருலகஞ் சுற்றிவருங் காலந்தன்னில்
சரியான நாகமலை பருவதத்தில் சட்டமுடன் உச்சிமுகங் கண்டிட்டோமே
5643.
கண்டோமே கழுக்குன்று சித்துதம்மை கைலாச நாதரும் எஙகளுக்கு
திண்மையுடன் உபதேசம் சொன்னாரங்கே தீர்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
வண்மையுடன் காலாங்கி நாதர்தாமும் வளமுடனே சீனபதிக் கேகினார்கள்
உண்மையாய் அடியேனும் குளிகைபூண்டு வுத்தமனே மலையாளம் வந்திட்டேனே
5644.
வந்தேனே எந்தனது சினேகபாலா வகுப்பான மலையாள தேசந்தன்னை
சந்தோஷமாக இக்காலமட்டும் சதுரான காவணத்தில் அடியேன் தானும்
நிந்தனைக ளில்லாமல் மாண்பர்முன்னே நிஷ்களங்க மாகியல்லோ சமாதிகொண்டே
சிந்தனையை விட்டல்லோ வையகத்தில் சிற்பரனை நண்ணியல்லோ இருக்கின்றேனே
5645.
இருக்கிறேன் துவாபர யுகந்தொடங்கி எழிலாக இந்நாளும் வுறுதியாக
திருக்கமலம் வீற்றிருக்கும் தூமாதேவி திகழான சன்னிதியைப் பாதுகாத்து
உருக்கமுடன் பத்மாசனத் திருந்து வுத்தமனே காலமதை கழித்துக்கொண்டு
பெருகமுடன் கன்னிமார் பூசையோடும் பேரின்ப நிலைதனிலே நிற்கின்றேனே
5646.
நிற்கின்றேன் தூமதா பதியிலப்பா நிலையான ஷேத்திரத்தில் வெகுகாலந்தான்
துற்கையெனும் மலையாள சன்னிதானம் துப்பரவாய் சமாதிமுகம் இருந்துகொண்டு
அற்பமென்ற லோகபதி யதிசயத்தை யருள்கடந்து கடல்கடந்து வன்பவனாய்
சற்பமென்ற சடாபாரந் தலையிலேந்தி சாங்கமுடன் மலையாளம் அமர்ந்திட்டேனே
5647.
இட்டேனே காலாங்கி நாதசீஷா எழிலாக எந்தனைநீ கண்டதாலே
சட்டமுடன் மனதுவந்து யுந்தனுக்கு சாங்கமுடன் தூமதாதேவி மந்திரம்
திட்டமுடன் வுந்தமக்கு யுபதேசங்கள் சிறப்பான தேவதா பிரணவத்தை
வட்டமுடன் உந்தனுக்கு உபதேசிக்கும் வளமையுடன் எந்தனது பாரந்தானே
5648.
பராபரமாங் காலாங்கி நாதசீஷா பட்சமுடன் பிரணவத்தை சொல்லக்கேளிர்
தீரமுடன் ஓமென்ற வட்சரத்தை தீர்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
வீரமுடன் தூம்தூம் என்றேசொல்லி விருப்பமுடன் பிரணவத்தை யுச்சாடித்து
கோரமுடன் கிலிகிலி யென்றேசொல்லி கொற்றவனே ஸத்தம்பய வென்றிட்டாரே
5649.
என்றாரே அண்டமதைத் தான்பிடுங்கி எழிலான வாகாயந் தனிலெறிந்து
குன்றான நாற்கடலுந் தத்தளிக்கக் குறிப்புடனே என்முன்னே ஓடிவாவா
சென்றுமே ஐயுங்கிலியும் சௌவுமென்று செப்பினார் பிரணவத்தை என்முன்நிற்க
வென்றிடவே லட்சமுரு வோதுவோது வுத்தமனே வசிவசி சுவாஹாயென்னே
5650.
என்னவே மண்டலத்தில் வசியமாச்சு எழிலான தூமதா தேவிமந்திரம்
சொன்னதொரு மந்திரத்தால் அஷ்டசித்தி சுந்தரனே யுந்தமக்கு பலிக்கும்பாரு
பன்னவே குளிகையது பூண்டுகொண்டு பாருலகஞ் சுற்றிவருங் காலந்தன்னில்
முன்னமே சித்துமுனி ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் சபித்திடவே வருவார்பாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக