5401.
தீரேதான் செந்தூரமென்ன சொல்வேன் திறமான நவகோடி ரிஷிகளப்பா
பூரேதான் சொன்னார்கள் இந்தபோக்கு வப்பனே யாமுனக்கு சொன்னோம்பாரு
சீரேதான் நாதாக்கள் சொன்னதில்லை சிறப்பான கல்லுப்பு மார்க்கவேதை
வீரேதான் பலபலவாஞ் சாஸ்திரத்தில் விருப்பமுடன் பாடிவைத்தார் கோடியாமே
5402.
கோடியாம் லவணமென்ற செந்தூரத்தை கொப்பெனவே மூலிவகை தன்னிலப்பா
நாடியே யாராய்ந்து சொன்னாரப்பா நலமான ஜெயநீர்தான் சொல்லவில்லை
மூடியே தான்மறைத்தார் ஜெயநீர்போக்கை முதன்மையா யானுரைத்தேன் ஜெயநீர்தன்னை
வாடியே மயங்காமல் செந்தூரத்தை வளமுடனே செய்பவனே வாதியாமே
5403.
வாதியாஞ் செந்தூரந் தன்னைத்தாக்க வளமுடனே சொல்லுகிறேன் வண்மைபாரு
சோதியாம் ரசிதமென்ற வெள்ளிதன்னில் துப்புரவாய்ப் பத்துக்கு வொன்றேயீய
நீதியாய் மாற்றதுவும் எட்டேயாகும் நிலையான நாதாக்கள் செய்யும்வேதை
ஆதியாம் தேவரிஷி முனிவர்தாமும் அன்புடனே செய்த செந்தூரந்தானே
5404.
தானான செந்தூரப் போக்குதன்னை தண்மையுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதியாக
பானான பராபரியை மனதிலெண்ணி பாச்சப்பா செம்புதனில் பத்துக்கொன்று
மானான மாற்றதுவும் ஒன்பதாகும் மகத்தான வேதையிது யதிதம்பாரே
5405.
பாரேதான் செந்தூர மேகும்போக்கு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
நேரேதான் குடவனில் பத்துக்கொன்று நேர்மையுடன் தான்கொடுக்கத் தங்கமாகும்
சீரேதான் சுயத்தங்கம் பிறவித்தங்கம் சிறப்பான சித்தரது தங்கமாகும்
ஆரேதான் செய்வார்கள் பிறவித்தங்கம் வப்பனே அறிவுளோன் செய்வான்காணே
5406.
காணவே செந்தூரம் போகும்போக்கு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
பூணவே மட்டமென்ற ஆணிப்பொன்னாம் பொங்கமுடன் களஞ்சியது நூறதாகும்
வேணபடி தானெடுத்து மூசையிட்டு விருப்பமுடன் தானுருக்கி குருவொன்றீய
நீணவே மாற்றதுவும் ஒன்பதாகும் நிலையான பிறவியென்ற பசும்பொன்னாமே
5407.
பொன்னான பொன்னல்லோ நாதர்வேதை பொங்கமுடன் யார்செய்வார் வையகத்தில்
கன்னானக் கருவூரான் முன்ஜென்மத்தில் கைலாய நாதரென்ற நடேசருக்கு
தென்னவனாம் பாண்டியரின் வுத்தாரந்தான் தேர்வேந்தன் சொற்படிக்குக் கருவுசெய்து
நன்னயமாய்த் தங்கமென்ற செம்புசெய்து நாதரைப்போல் கருவுசெய்து நாட்டினாரே
5408.
நாட்டினார் கருவூரார் தங்கமப்பா நாயகனே யித்தங்கம் ஒப்பதாகும்
மேட்டிமையாய் அனேகம்பேர் சித்துதாமும் மேன்மையுடன் பலபலவாம் வாதஞ்செய்து
தாட்டிகமாய் தரணிதனில் பூசைக்கி தாரணியில் வெகுபேர்கள் செய்தார்மாண்பர்
வட்டமுடன் காலாங்கி முறைகள்போல வையகத்தில் கண்டதில்லை யாருந்தானே
5409.
தானான செந்தூரந் தன்னையப்பா தண்மையுடன் மண்டலந்தான் கொண்டபேர்க்கு
கோனான காலாங்கி நாதர்தாமும் கொற்றவனார் குருசொன்ன வாக்குபோல
பானான சட்டையது மிகவேநீங்கி பளபளத்து தேகமது மின்னும்பாரு
மானான மஹேஸ்வரியாள் நிர்த்தஞ்செய்வாள் மன்னவனே யுந்தமக்கு வழிசொல்வேனே
5410.
சொல்வேனே யின்னமொரு மார்க்கங்கேளு துப்புரவாய் புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருசொன்ன நீதியப்பா
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலும் தெளிவான வஞ்சனமாம் சல்லியப்போக்கு
மானான வண்டமென்ற காகமப்பா மகத்தான சத்தூறு வருஷமாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக