5271.
என்னவே தேவனது யெட்டுநாளும் எழிலாக மாண்பருக்கு வமைந்திருக்க
பன்னவே வெள்ளிதனில் திரவியங்கள் பாருலகில் யீவதுவே தருமமமல்ல
சொன்னபடி காரிதனில் சவளமாகா துப்புரவாய் அருக்கனில் விருந்துமாகா
நன்மையாய் திங்களது வாரசூலை நலமுடனே மாண்பருக்கு காட்டினாரே
5272.
நாட்டமுடன் செவ்வாய்க்கு மேற்குதானும் நலமுடனே பயணமது வாகாதென்றும்
தேட்டமுடன் புதனுக்கு வடக்கேதானும் செம்மலுடன் பயணமது வாகாதென்றும்
நீட்டமுடன் குருவாரம் ஸ்தானமாகா நிலையான நாளெல்லாம் தீயநாளாய்
வாட்டமுடன் சாஸ்திரங்கள் கூறிருக்க வளமுடனே நாளெந்த பலந்தான்காணே
5273.
காணவே நாளெல்லாம் முறைப்பாடாக காசினியில் சாஸ்திரங்கள் பார்த்ததானால்
தோணவே எந்தநாள் நல்லநாளென்று துப்புரவாய் தன்மனதில் எண்ணலாகும்
வேணவே நாளெட்டும் நல்லநாளாய் விருப்பமுடன் உம்பரனார் செய்திருக்க
நஈணவே மதியீன மாண்பரெல்லாம் நிலைகெட்டு மதிகெட்டு நின்றிட்டாரே
5274.
நின்றாரே காலாங்கி நாதர்தம்மால் நீடூழி காலம்வரை யடியேன்தானும்
குன்றான அவர்பாதந் தொழுதுமல்லோ குளிகைகொண்டு மலையேறி மலைதான்கண்டேன்
சென்றேனே சீனபதிக் கிடபாகத்தில் சிறப்பான தேசமது வனேகமுண்டு
வென்றிடவே பலஜாதி மாண்பர்தாமும் விருப்பமுடன் கண்டல்லோ மறிந்திட்டேனே
5275.
அறிந்தேனே சாஸ்திரங்கள் அனேகமுண்டு அவர்களது பேதமைகள் சொல்லொண்ணாது
குறிந்துமே முழுகுநாள் தன்னிலப்பா கூரான சாஸ்திரங்கள் மெத்தவுண்டு
முறிந்ததொரு வுதிரமது தீட்டேயென்று முனையான சங்கநதி முழுகவென்று
நெறிந்துமே ஸ்நாணமது செய்யவென்று நேரான வாற்றோரஞ் செல்வார்பாரே
5276.
பாரேதான் ஸ்நாணமது செய்யநன்று பாங்கான சடங்குகளுஞ் செய்யநன்று
நேரேதான் ஓமமது செய்யநன்று நெடிதான தீட்டதுவைக் கழிக்கநன்று
சீரேதான் சாஸ்திரத்தின் தொகுப்பைப்போல சிறப்பான வைதீகஞ் செய்யநன்று
தீரேதான் தீட்டினது மார்க்கத்தாலே திகழுடனே யொன்றுதான் காணார்பாரே
5277.
காணாரே சூதகங்கள் நேர்ந்தபோதும் கடிதான வேலைமுகஞ் செய்யும்போதும்
நீணவே மண்பாண்டம் தனையெடுத்து நீதியுடன் ஜலக்கரைக்குப் போகும்போது
வேணபடி யன்னமது சமைக்கும்போதும் வேண்டியே விருந்தமுர்தங் கொள்ளும்போதும்
ஆணவங்கள் தானொடுங்கித் தீட்டேகண்டால் அவனிதனில் விட்டெறிந்து போனார்தாமே
5278.
போட்டாரோ பாண்டமது வன்னந்தானும் பொங்கமுடன் காய்ப்பதார்த் தங்கள்பேதம்
நீட்டமுடன் சமைத்ததுவும் போட்டிட்டாரோ நிலையான தீட்டதுவும் மெய்யேயாகும்
தேட்டமுடன் அவர்போட்ட வேஷமெல்லாம் தெளிவான வேஷமென்று செப்பலாகும்
வாட்டமுடன் தீட்டதனில் பிறந்தோர்தாமும் வண்மையுடன் தீட்டதுவும் மெய்யென்றாரே
5279.
மெய்யான தீட்டதுவும் தயங்கியல்லோ மேதினியில் தேகமென்ற வுருவுமாச்சு
கையுடனே கருவிகர ணாதியோடும் காசினியில் மாதர்களின் கெர்ப்பக்கோளில்
பையுடனே வந்துதித்த கற்பாத்திரந்தான் பாலகனே திரண்டுருவாய் வடிவங்கொண்டு
எய்யவே கடவுளது வரத்தினாலே யெழிலான சடலமது பிறக்கலாச்சே
5280.
ஆச்சப்பா சதகோடி மனிதரெல்லாம் அப்பனே பிறவியது யிதனாலாச்சு
மூச்சுடனே தேகாதி கற்பத்தோடும் மூதுலகைக் கண்டதொரு மானிடமுமாச்சு
பாச்சலென்ற பிறவியது தீட்டேயாச்சு பாங்கான சடலமது மண்கூறாச்சு
மாச்சலுடன் மகதேவர் கடாட்சத்தாலே மானிலத்தில் சகலவுயிர் தீட்டாலாச்சே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக