5351.
பாரேதான் செம்பதுவும் என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் செய்யும்வேதை
சீரேதான் செம்பதுவும் எடுத்துமைந்தா செயம்பெற்றே யோடதனில் ஊதிப்போடு
நேரேதான் செம்பதுவும் ஊறலேகி நெடிதான கலசகுண் டலத்துக்காதி
ஆரேதான் செய்வார்கள் இந்தபாகம் வப்பனே விதியாளிக் கமையும்பாரே
5352.
விதியான செம்பதனை யெடுத்துமைந்தா விருப்பமுடன் தான்போகும் வழியைக்கேளு
மதியான வெள்ளிதனில் நாலுக்கொன்று மகத்தான செம்பதனைக் கொடுத்தாயானால்
பதியான மதியதும் பழுப்பேயேறி பாங்கான செம்பதுவும் தங்கச்செம்பாய்
துதியான சிவத்துக்கு உறுதிசெம்பொன் துறையான வழிபாடு முறைபாடாமே
5353.
பாடான செம்பதுவும் என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் செய்யும்வேதை
தாடாண்மை கொண்டதொரு சித்துவேதை தகமையுள்ள புத்திமான் அறிவான்பாரு
நாடான வையகத்தில் கருமிமாண்பர் நன்மையுடன் கதைபேசி முறைகள்பேசி
சாடான நயம்பேசி காமும்பேசி சார்பான முறைதனையே கேட்பார்பாரே
5354.
கேட்டாலும் முறைதனையே கொடுக்கவேண்டாம் கெடியான மாண்பருக்குக் கொடுப்பாயானால்
வாட்டமுடன் தலைதான் தெரித்துப்போகும் வளமுடனே நாதாக்கள் சொன்னவாக்கு
தேட்டமுடன் நண்பருக்குக் கொடுப்பாயானால் தெளிவான சியோகம் கிட்டும்பாரு
ஆட்டமது செம்பினது ஆட்டமல்லோ வவனிதனில் யார்காண்பார் வதிதம்பாரே
5355.
பாரேதான் இன்னமொரு மார்க்கங்கேளு பான்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் நாகமொரு சேர்தானாகும் நிலையான இலுப்பைநெய் தன்னிலப்பா
சீரேதான் நாகமதை யுருக்கிக்கொண்டு சிறப்புடனே சாரமதை கிராசமீவாய்
தீரேதான் கிராசமது கொடுத்துமல்லோ திறமுடனே இலுப்பைநெய்யில் வுருக்கிச்சாயே
5356.
சாய்க்கவே நாகமது சுத்தியாச்சு தகமையுடன் மூவைந்து தரமேசாய்க்க
வாய்க்கவே நாகமது கண்ணொடுங்கி வளமான நாகமது சவளைபோலாம்
நாய்த்துளசி மூலிதனை யரைத்துமைந்தா நலமான நாகத்துக் கங்கிபூட்டி
மாய்க்கவே சீலையது வலுவாய்ச்செய்து மறவாமல் கோழியது புடமுந்தானே
5357.
தானான புடமதுவும் இப்படியேபோடு தண்மையுள்ள நாகமது கண்ணொடுங்கி
வேனான வெள்ளியது வுருக்குபோல வெகுஜோதி நாகமப்பா யென்னசொல்வேன்
கோனான முன்சொன்ன மூலிதன்னால் கொற்றவனே புடமூன்று போடுபோடு
மானான நாகமது சீறலற்று மார்க்கமுடன் வெள்ளிபோ லிருக்கும்பாரே
5358.
இருக்குமே வெள்ளியென்ற நாகந்தன்னை யெழிலாகத் தானெடுத்து செப்பக்கேளிர்
நொருக்கியே நாகமதை யெடுத்துமைந்தா நோக்கமுடன் சூதமது சரியாய்ச்சேர்த்து
பருக்கியே கெந்தகத்தின் தயிலத்தாட்டி பாங்குபெற ரவிதனிலே காயவைத்து
தெரிக்கவே குழியம்மி தன்னிலிட்டு தெளிமையுடன் பொடிபண்ணி செப்பக்கேளே
5359.
செப்பவென்றால் காசியென்ற குப்பிதன்னில் சிறப்புடனே மருந்தையெல்லாம் குகையிலூட்டி
ஒப்பமுடன் மரக்கல்லால் கொண்டுமூடி வுத்தமனே சீலையது யேழுஞ்செய்து
தப்பிதங்கள் வாராமல் பாண்டந்தன்னில் தன்மையுடன் மணலதனைக் கீழமைத்து
அப்போதே மணலதனை மேற்பொதிந்து வண்புடனே பாண்டமதை சீலைசெய்யே
5360.
செய்யவே சீலையது வலுவாய்ச்செய்து திறமுடனே தானெரிப்பாய் நாலுசாமம்
வெய்யவே நாற்சாம மெரித்தபோது வேதாந்தத் தாயினது செந்தூரந்தான்
துய்யபுகழ் ராஜாதி ராஜர்தானும் துப்புரவாய் வருணனென்ற செந்தூரத்தை
பையவே சோதித்து வுந்தனைத்தான் பட்சமுடன் கேட்டுவழி யறிவார்தாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக