5501.
வித்தையா மின்னமொரு மார்க்கங்கேளு வேதாந்தப் புண்ணியனே விளம்புவேன்பார்
சித்திபெற காலாங்கி நாதர்வாக்கு சீருலகில் பொய்யாது மெய்யேயாகும்
சத்தியமாங் காலாங்கி சொன்னநீதி சதாகால மெந்தனுக்கு குருவாக்காகும்
நித்தியமும் அந்திசந்தி பாதம்தொட்டு நினைக்கிறேன் போகரிஷி நினைக்கிறேனே
5502.
நினைக்கிறேன் லீலாவினோதந் தன்னை நிலையான கருமான மேதென்றாக்கால்
கனையான மலையோரந் தேடிப்போனால் சுருக்கான வாத்தலரி வேர்தானுண்டு
தினைபோலே வித்துள்ள மலைதாங்கியப்பா சிறப்பான திருநீற்று சூலியாகும்
பனைபோன்ற வேரதனை வெள்ளிதன்னில் பட்சமுடன் காப்பதுவுங் கட்டிடாயே
5503.
கட்டியே காப்பதுவுந் தீர்ந்தபின்பு கணேசருக்குப் பொங்கலிட்டு காவுதந்து
எட்டியுட வடவேரைத்தான் பிடுங்கி யெழிலாக யெரிகாலன் வேருங்கூட்டி
தட்டியே ரழிஞ்சி மூலந்தானும் சாங்கமுடன் பொன்னினா வாரைக்கூட்டி
குட்டியென்ற மிளகுசா ரணையுஞ்சேரு கூறான சமனிடையாய் களஞ்சிதூக்கே
5504.
தூக்கியே தலைச்சுருளி மூலங்கூட்டி துப்புரவாம் ருதுகால சீலைதன்னில்
ஆக்கமுடன் தலைமஞ்சங் கொடியுஞ்சேர்த்து வப்பனே சீலைதன்னில் வைத்துருட்டி
நோக்கமுடன் ஐங்கோலத் தயிலத்தாட்டி நுணுக்கமுடன் பேரண்டந் தன்னிலப்பா
தீக்கமல மானதொரு கலசந்தன்னில் திகழுடனே தீபமது ஏற்றிடாயே
5505.
ஏற்றியே மையதனை வாங்குவாங்கு யெழிலான சிமிழ்தனிலே பதனம்பண்ணு
போற்றியே மனோன்மணித்தாய் பதாம்புயத்தை பொங்கமுடன் சதாகாலம் நிமிர்த்தம்செய்து
ஆற்றியே ஐங்கோல கருவின்மையை வப்பனே லலாடமதில் விட்டுமேதான்
கூற்றனெனும் காலனவன் தான்நடுங்க குவலயத்தில் சாரியது வருவாய்பாரே
5506.
பாரேதான் மையதனை தீட்டியல்லோ பாருலகில் மங்கையரைக் கண்டபோது
நீரேதான் மன்மதனா ரென்றுசொல்லி நினைவுதடு மாறியங்கே யுனைநினைத்து
ஆறுபுடை சூழ்நகரம் நிதியும்விட்டு ஆஸ்தான வரண்மனையுந் தான்மறந்து
வீறுபுகழ் மன்மதனென் றெண்ணியல்லோ வீடுவிட்டு நாடறிய வருவாள்காணே
5507.
காணவே மையதனைக் கண்டபோது கடுங்காளை யானதொரு மாண்பரெல்லாம்
பூணவே யுமதிடத்தில் புத்திகூர்ந்து புகழான சித்தரவர் என்றுகூறி
ஆணவங்கள் தானொடுங்கி யதிகநட்பா யப்பனே யுனைவந்து வணங்குவார்கள்
காணறிய பரஞ்சுடர்போல் கருதிலுண்ணி கடாட்சித்து வவர்தமக்கு வதிதஞ்செய்யே
5508.
செய்யவே நட்பால ரெல்லாங்கூடி செம்மலுடன் மனதுவந்து யுமைப்பணிந்து
வெய்யதொரு விட்டகுறை யிருந்ததாலே வேதாந்த சித்துதமைக் காணலாச்சு
பையவே யுன்பாதங் கிட்டியல்லோ பராபரத்தின் பரவொளியைக் காணவென்று
உய்யவே பிராணாயந் தன்னில்நின்று ஓகோகோ வதிதமிகச் செய்வார்பாரே
5509.
பார்க்கையிலே யுந்தமக்கு லோகந்தன்னில் பாரிலுள்ள ராஜமுடி மன்னரெல்லாம்
ஏர்க்கவே மகாசித்து யிவர்தானென்று யெழிலான வாசீர்மம் மிகவுங்கூறி
தீர்க்கமுடன் மையதனைத் தருகவென்று திரளான நிதியனைத்தும் கொடுப்பாரப்பா
ஆர்க்க சிம்மாதனந் தான்கொடுத்து வப்பனே வஞ்சலிகள் செய்வார்பாரே
5510.
பார்க்கவே யஷ்டசித்து வுனக்குள்ளாச்சு பாங்கான வையகமும் கைக்குள்ளாச்சு
ஏர்க்கவே சிற்றின்ப நிலைமறந்து யெழிலான பேரின்ப சாகரத்தை
ஆர்க்கமுடன் மனந்தனிலே நிட்சயித்து வப்பனே பதாம்புயத்தை மேலேநண்ணி
தீர்க்கமுடன் சமுசாரக் கடலைநீக்கி சிற்பரனை யறியும்வகை தேடிக்கொள்ளே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக