பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5461-5470

5461.
நன்றான கருவதனை வொன்றாய்கூட்டி நாயகனே பொடியதுவாய்ச் செய்துகொண்டு
குன்றான மனோன்மணித்தாய் கிருபையாலும் கோவேந்தர் காலாங்கி கிருபையாலும்
பன்றாக சிமிழ்தனிலே யடைத்துக்கொண்டு பாங்குபெற சின்மயத்தை மனதிலெண்ணி
வென்றிடவே பூமிதனில் வீடமைத்து விருப்பமுடன் நவகோணங் கீறிடாயே
5462.
கீறவே நவகோண மென்னவென்றால் கிருபையுடன்சொல்லுகிறேன் மைந்தாகேளு
ஆறவே கோணமதில் நின்றுகொண்டு வப்பனே ஓங்காரம் மனதிலுண்ணி
மாறலென்ற வட்சரமாய் யௌவும்சௌவும் மகத்தான ரீங்ரீங்ஐயுங் கிலியுமாறு
தூறலது வாராமல் எளியபாலா துப்புரவாய் அட்சரத்தை யோதிடாயே
5463.
ஓதையிலே லட்சமது வுருவுபோடு வுத்தமனே மனோன்மணியாள் நிர்த்தஞ்செய்வாள்
நீதமுடன் தரிசனங்கள் கண்டபோது நீநினைத்த காரியங்கள் சித்தியாச்சு
சாதனைகள் செய்தாலே யெல்லாஞ்சித்தி சட்டமுடன் வையகத்தில் மாந்திரீகனாவாய்
தோதமுடன் தாமிருந்து வாழ்க்கைபூண்டு தோறாமல் அஷ்டசித்தி யாடுவாயே
5464.
ஆடவென்றால் கருவென்ன பொடிதானப்பா வப்பனே நீநினைத்த மாதுதன்மேல் 
போடவே மனதுவந்து வசியமாகி பொங்கமுடன் பின்னேயது துடறுவாள்பார்
நீடவே தொடர்ந்ததொரு மாதுதன்னை நீநினைத்த கலவிதனில் அனுபவித்து
சாடவே யெந்நாளும் பட்சம்வைத்து சட்டமுடன் பாதுகொள்ள நினைப்பீர்தானே
5465.
தானான காலாங்கி சொன்னவாக்கு தாரிணியில் பொய்யாது மெய்யேயாகும்
கோனான கருக்கள்வித்தை கோடிசொன்னார் குவலயத்தில் செய்வதற்கு யாராலாகும்
தேனான வித்தையது சிடிகைவேதை செப்பினே னுந்தமக்குக் கூர்ந்துபாரு
மானான வையகத்தில் சித்தனைப்போல் மாசற்று எந்நாளும் வாழ்குவீரே
5466.
வாழ்கவென்றால் இன்னமொரு மார்க்கங்கேளு வகையான புலிப்பாணி மைந்தாபாரு
ஆழ்கடலுஞ் சத்தசாகர முந்தாண்டி வப்பனே காலாங்கி தாள்பணிந்து 
மூழ்கியே சகலநதி தீர்த்தமாடி மூதுலகில் குளிகைகொண்டு வந்தேன்யானும்
பாழ்நகர தேசமது வனேகமுண்டு பார்த்தேனே வெகுகோடி வித்தைதானே
5467.
தானான வித்தையது கோடாகோடி தகமையுள்ள கண்மணியே யின்னங்கேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தன்பாத கிருபையாலே
பானான பட்சியது வடைக்கலந்தான் பண்பான வாண்பட்சி கொண்டுவந்து
மானான மடமாதர் சுரோணிதந்தான் மகத்தான வாத்மஜலங் கூடக்கூட்டே
5468.
கூட்டியே ரெண்டையுந்தான் பட்சிதன்னில் குறிப்புடனே வாயியிட தன்னிலூட்டி
தாட்டிகமாய் மண்கலசந் தன்னில்வைத்து தம்மையுடன் மண்சீலை யேழுஞ்செய்து
வாட்டமுடன் வாலுகையா மேந்திரத்தில் வளமுடனே தானெரிப்பாய் ஐந்துநாளும்
தேட்டமுடன் தீயாறி யெடுத்துப்பாரு தெளிமையுடன் தவனமென்ற பற்பமாச்சே
5469.
ஆச்சப்பா பற்பமது யென்னசொல்வேன் ஆரறிவார் அடைக்கலத்தின் வசியயீடு
மூச்சடங்கிப் போனதொரு தேகந்தானும் முனையான வீடுதன்னால் மோகமாகி
பேச்சதுவும் பேசுதற்கு முன்னேதானும் பேரின்பந் தனைமறந்த கல்விகட்கும்
ஆச்சப்பா பற்பமதை யனுமானத்தில் வப்பனே கொடுத்திடுக வசியமாமே
5470.
வசியமா மனுபான மேதென்றாக்கால் வளமான பாணியென்ற தண்ணீராகும்
கசிதமுள்ள தண்ணீரில் சிடிகைதாக்க கருவான பற்பத்தால் வசியமாவார்
நிசிதமுள்ள மாதர்களும் வசியமாகி நிலையான கலவிக்கு ஒவ்யலாகி
முசிதமுடன் எந்நாளும் உந்தன்பக்கல் மோகித்து உனையனைந்து வணங்குவாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக