பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5521-5530

5521.
பாரேதான் துரோகமது செய்தபேர்க்கு பண்பான கருமான மொன்றுசொல்வேன்
நீரேதான் மனங்கொண்டு மனங்களித்து நீதியுடன் துரோகமது செய்தபேர்க்கு
கூரேதான் அமாவாசை யருக்கநாளாம் குறிப்புடனே மாளிதனில் வாழுகின்ற
சீரேதான் மீஞ்சூரு தனைப்பிடித்து சிறப்புடனே யதில்செய்யும் வகையைக்கேளே
5522.
வகையான மீஞ்சூரைக் கொண்டுவந்து வன்குடலிற் காயமதைச் சுத்திசெய்து
தொகையான வுருவதும் லட்சமோதி சுந்தரனே எதிராளி பேரைமாறு
சிகைதனிலே ரோமமது சேகரித்து சிறப்புடனே மீஞ்சூருக் காப்புகட்டி
பகையான யெதிராளி மூலங்கண்டு பட்சமுடன் கருதனையே நாடிப்பாரே
5523.
நாடியே யுந்தனுக்கு துரோகஞ்செய்த நலமான படுபாவி சண்டாளன்தான்
தேடியே அவனிருக்கும் இடத்திற்சென்று தேற்றமுடன் கோஜலத்தின் மண்ணையப்பா
நீடியே தானெடுத்துக் கொண்டுவந்து நெடிதான கருமான மண்ணையப்பா
கூடியே பேதனங்கள் கூறி கூசாமல் மீஞ்சூரின் வாயிலூட்டே
5524.
ஊட்டியே பிரிதிவென்ற மண்ணைத்தானும் வுற்றதொரு கருவிகர ணாதிமண்ணை
தாட்டிகமாய் மீஞ்சூரின் வாயின்மட்டும் தயங்காமல் கிட்டணைகள் செய்தபின்பு
வாட்டமுடன் இருவாயை மூடியல்லோ வளமுடனே தான்தைத்து சீலைசெய்து
ஆட்டமுடன் மீஞ்சூரின் பவனிவாயை வப்பனே மேல்நோக்கி நிறுத்திடாயே
5525.
நிறுத்தியே தலைகீழாய் மீஞ்சூர்தன்னை நீதியுடன் நவகோணச் சக்கரத்தில்
உறுத்தியே தராசுமென்ற முள்தானப்பா வுத்தமனே நாற்சதுர மாகநாட்டி
கருத்துடனே வராகமென்ற சவ்வைத்தானும் கலங்காமல் நாற்சதுர மூலைமாட்டி
பொருத்தமுடன் நடுமையந் தொளாந்திரமாக பொங்கமுடன் வசிநாட்டி வுருவுமோதே
5526.
ஓதவே எதிராளி பேரைமாறி வுத்தமனே பேதனத்தை செய்துமல்லோ
நீதமுடன் யாகங்கள் தானுஞ்செய்து நிஷ்களங்க மாகவல்லோ ஓமகுண்டம்
போதவே பராணாயந் தன்னிற்சென்று போங்கமுடன் சின்மயத்தி லேறிநின்று
சாதகமாம் வாசிதனை தியானித்தேதான் சட்டமுடன் பிரணவத்தை சாற்றுவீரே
5527.
சாற்றவே எதிராளி தன்தனக்கு சட்டமுடன் மலஜலமுங் கட்டிப்போகும்
கூற்றனுக்கு விடமுண்டு பின்னுந்துன்பம் குவலயத்தில் யார்படுவார் இந்தபாடு
ஏற்றதொரு கருவிகர ணாதியாலே யெழிலான துன்பமதுக் கிடமேயாச்சு
மாற்றமுடன் கருவென்ற பிரிதிவினாலே மகத்தான கோடிவித்தை யாடலாமே
5528.
ஆடலாம் புலிப்பாணி மைந்தாகேளு வவனிதனில் உனைப்பகைத்த மிடியோர்தானும்
தேடியே உந்தனைத்தான் மிகவேநாடி தேற்றமுடன் பாதந்தொழு திட்டாக்கால்
நீடியே முன்வைத்த கருமானத்தை நிகட்சியுடன் நிவர்த்தியது செய்துமல்லோ
கூடியே யுபசார வார்த்தைகூறி கொற்றவனே திருப்பிவிட்டால் தருமமாமே
5529.
தருமமா முந்தனுக்கு மோட்சமுண்டு தாரிணியில் குடிகெடுக்கும் பாவியோரை
கருவென்ற கருவிகர ணாதியாலே கலக்கமவர் செய்தவனே தியக்கங்கொண்டு
பொருளதனை யவனிடத்தில் அபகரித்து பொங்கமுடன் சாந்தியது மிகவேசெய்து
குருதனையே தானினைத்து கருமியோர்க்கு குவலயத்தில் புத்திமதி கூறநன்றே
5530.
நன்றான யின்னமொரு போக்குசொல்வேன் நலமான காலாங்கி சொன்னநீதி
குன்றான மலைபோலே கோடிவித்தை கூறினா ரெந்தனுக்கு லக்கோயில்லை
வென்றிடவே சிலபாகஞ் சிடிகைவேதை வேதாந்தத் தாயினது கிருபையாலே
தென்றிசையில் அடியேனுங் குளிகைகொண்டு தேற்றமுடன் வித்தைமிகக் கண்டேன்பாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக