5391.
எண்ணவே முத்துமணி சூரியன்போல் எழிலான காந்தியது என்னசொல்வேன்
பண்ணவே ரிஷிமுனிவர் சித்தராலும் பாருலகில் முடியாது இந்தவேதை
நண்ணவே காலாங்கி கடாட்சத்தாலே நாட்டினேன் சீனபதி மாண்பருக்கு
வண்ணமுள்ள வேதையிது மகாசங்கந்தான் மார்க்கமுடன் பூநீரின் வேதையாமே
5392.
வேதையா மின்னமொரு மார்க்கங்கேளு விருப்பமுடன் சொல்லுகிறேன் வுகந்துபாரு
பாதையாம் மூப்பென்ற செந்தூரத்தை பலபலவாஞ் சாத்திரத்தில் மிகவுஞ்சொன்னார்
நீதையுடன் உப்பென்ற செந்தூரத்தை நீட்சியுடன் உங்களுக்கு முகஞ்சொன்னதில்லை
சோதையாம் பலபலவாஞ் சாத்திரத்தை தோறாமல் கண்டல்லோ துணிவுற்றேனே
5393.
துணியான லவணமென்ற செந்தூரந்தான் துப்புரவாய் யானுரைப்பேன் மைந்தாகேளு
கணிதமுடன் உப்பென்ற கல்லுப்பல்லோ கருத்துடனே சேரதுதான் ஒன்றேயாகும்
பணிவுடைய குழியம்மி தன்னிலிட்டு பாலகனே மூலிவகை செப்பக்கேளே
துணிவுடனே செவ்வல்லி பூச்சார்கொண்டு சிறப்புடனே நாற்சாம மரைத்திடாயே
5394.
அரைத்துமே நாற்சாம மானபின்பு வப்பனே பில்லையது தட்டியல்லோ
வரைந்ததொரு ரவிதனிலே காயவைத்து வளமான சீலையது வலுவாய்ச்செய்து
திரைத்துமே கோழியென்ற புடத்தைப்போடு தீரமுடன் செந்தூர மாகும்பாரு
யரைத்துமே யிப்படியே பத்துமுறைபோடு பாங்கான செவ்வல்லி மூலிதாமே
5395.
மூலியா மின்னமொரு பாகங்கேளு முனையான புலியாரைச் சாற்றினாலே
சலியாமல் தானரைப்பாய் நாலுசாமம் சட்டமுடன் ரவிதனிலே காயவைத்து
மாலியுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து மகத்தான ரவிதனிலே காயவைத்து
ஆவியது வாராமல் புடந்தானப்பா வப்பனே கோழியென்ற புடந்தான்போடே
5396.
போடவே செந்தூர மென்னசொல்வேன் பொங்கமுடன் நாதாக்கள் சொன்னதில்லை
நீடவே யிப்படி பத்துபுடம்போடு நெடிதான செந்தூர மாகும்பாரு
தேடவே யின்னமொரு மூலிசொல்வேன் தெளிவான செந்தூர மாகும்பாரு
கூடவே மூலியது தான்பிழிந்து கொற்றவனே தானரைக்க வகையைக்கேளே
5397.
கேளப்பா மூலியது சாற்றினாலே கெடிதான வுப்பென்ற செந்தூரத்தை
மாளப்பா நாற்சாமம் அரைத்துமேதான் மகத்தான வில்லையது தட்டியல்லோ
சூளப்பா ரவிதனிலே காயவைத்து சுத்தமுடன் ஓட்டிலிட்டு சீலைசெய்து
ஆளப்பா கோழியென்ற புடத்தைப்போடு வப்பனே செந்தூர மாகுங்காணே
5398.
காணவே யிப்படியே பத்துமுறைபோடு கயிலாச நாதருட செந்தூரந்தான்
தோணவே செந்தூரந் தனையெடுத்து துப்புரவாய் ஜெயசூத மெடைக்குப்பாதி
வேணபடி தானெடுத்துக் கல்வமிட்டு வேதாந்தத் தாய்தனை மனதிலுன்னி
நீணவே கல்வமதி லிட்டுமைந்தா நீதியுடன் அரைப்பதற்கு வழிதான்கேளே
5399.
வகையான செந்தூர மரைப்பதற்கு வண்மையுடன் ஆறுவகை ஜெயநீரப்பா
துகையான துருசுவெடி யுப்புக்காரம் தோற்றமுள்ள வருஞ்சாரம் கரியுப்பாகும்
பகையான சீனமது வொன்றுகூட்டி பக்குவமாய் ஜெயநீருந் தானிரக்கி
மிகைபடவே தானரைப்பாய் நாலுஜாமம் மேன்மையுடன் வில்லையது லகுவாய்த்தட்டே
5400.
தட்டியே ரவிதனிலே காயவைத்து சாங்கமுடன் வில்லையது வோட்டிலிட்டு
சட்டமுடன் சீலையது வலுவாய்ச்செய்து சாங்கமுடன் புடமதுவுங் கோழியாகும்
திட்டமுடன் தான்போட்டு எடுத்துப்பாரு திறமான செந்தூர மாகும்பாரு
வாட்டமுள்ள செந்தூரந் தனையெடுத்து வளமையுடன் முன்போல பகிர்ந்திடீரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக