5701.
மட்டான இடைக்காடர் ஜாதிபேதம் மகத்தான கோனாரே யென்னலாகும்
சிட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும் திகழான நூலதனிற் கண்டமட்டும்
சட்டமுடன் தன்வந்திரி ஜாதிபேதம் தகமையுள்ள மகாவிஷ்ணு யென்னலாகும்
வட்டமுள்ள தலைமுறைகள் முப்பத்திரண்டு வளமுடனே கண்டறிந்த நூலிதாமே
5702.
தாமான புலிப்பாணி மைந்தாகேளு தகமையுள்ள மூலத்தீ யீசனப்பா
சாமானிய மானதொரு ஜாதிபேதம் சாங்கமுடன் வேளாளன் என்னலாகும்
கோமானாந் தலைமுறைகள் இருபத்தேழாம் கொற்றவனே நூற்படியே சொல்லலாச்சு
பூமான்கள் சித்தவர்க்க நூல்கள்தன்னில் புகட்டவில்லை ஜாதிபேதம் புகலார்தாமே
5703.
தானான சிலநூலில் சொன்னாரப்பா தன்மையுள்ள சிலநூலில் சொல்லவில்லை
கோனான அகத்தீசர் ஜாதிபேதம் கொற்றவனே வேளாளா ரென்னலாகும்
பானான தலைமுறைகள் ஏதென்றாக்கால் பதமுடனே நாற்பத்தி யெட்டேயாகும்
மானான நூல்தனிலே கண்டாற்போல மகத்தான போகரிஷி வகுத்திட்டேனே
5704.
வகுத்தேனே சிவவாக்கியர் ஜாதிபேதம் வளமான சங்கரகுல மென்னலாகும்
தொகுப்புடனே தலைமுறைகள் யிருபதாகும் தோறாமல் சாத்திரங்கள் புகன்றவாரும்
மிகுத்திடவே ராமதேவர் ஜாதிபேதம் மிக்கான விஷ்ணுகுல மென்னலாகும்
பகுத்திடவே தலைமுறைகள் ஆறதாகும் பாங்கான வவர்நூலில் கண்டோம்யாமே
5705.
கண்டோமே புஜண்டரிட ஜாதிபேதம் கருவான வக்கினிகுல மென்னலாகும்
விண்டதொரு தலைமுறைகள் நாற்பத்தைந்து வீரான சாத்திரத்தில் கண்டதுண்டு
பண்டிதமாம் வன்னியரின் புராணக்கூறு பலபலவாய்ப் பாடிவைத்தார் கவிவாணர்தாமும்
கண்டகம்போல் சாத்திரங்கள் மிகவுங்கூறி தாமறைத்தார் சித்துமுனி ரிஷிகள்தாமே
5706.
தானான கருவூரார் ஜாதிபேதம் தாக்கான பஞ்சணத்தில் குலத்திலொன்று
கோனான கன்னார ஜாதியாகும் கொற்றவனே நூல்தனிலே கண்டவாறு
தேனான தலைமுறைகள் நாற்பத்திரண்டு தெளிவுடனே நூல்தனிலே சொன்னார்பாரு
மானான மார்க்கமது சமயபேத மார்க்கமுடன் அவரவர்நூல் அறியலாமே
5707.
அறியவே புண்ணாக்க ரீசர்தாமும் அவருடைய ஜாதிபேதங்கள் சொல்வேன்
நெறியான கன்னடிய ஜாதியாகும் நேர்பான தலைமுறைகள் ஏதென்றாக்கால்
குறியான பதினெட்டு தலைமுறைதானாகும் குறிப்பான சாத்திரத்தில் சொன்னவாறு
முறியான சித்தர்மகா ரிஷிகள்நூலில் முறைபாடு சிலபேர்கள் சொல்லாரன்றே
5708.
சொல்வாரே புலிப்பாணி மைந்தாகேளு சுத்தமுள்ள கண்மணியே புகல்வேன்பாரு
வல்லான புலிப்பாணி மரபேதந்தான் மார்க்கமுடன் வேடனது ஜாதியல்லோ
புல்லான தலைமுறைகள் ஒன்பதாகும் புகழான நூல்தனிலே புகலும்வாறு
நல்லான ரிஷிதேவர் முனிவர்தானும் நலமுடனே சிலருரைத்து சிலர்மறைத்தாரே
5709.
மறைவான நந்தீசர் மரபேதென்றால் மார்க்கமுடன் மிருகமகா ரிஷியார்கோத்திரம்
குறையான தலைமுறைகள் ஏதென்றாக்கால் கொற்றவனே மூன்றுதலை முறைதானாகும்
நிறைவான சாத்திரத்தில் சொன்னவாறு நிஷ்களங்க மாகவல்லோ கண்டறிந்தோம்
முறையான முனிதேவர் ரிஷிகள்நூலில் முற்றிலுஞ் சொல்வார்கள் மறைத்தார்காணே
5710.
காணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கருவான புலஸ்தியரின் மரபேதென்றால்
தோணவே சிங்களவ ஜாதியாகும் தோறாமல் தலைமுறைகள் எட்டதாகும்
பூணவே புலஸ்தியர் இந்நூல்கள்தன்னில் புகலாமல் மறைத்துவைத்தார் முன்னோர்தாமும்
வேணபடி யான்கண்ட வரைதானப்பா வித்தகனே வெளியிட்டேன் பண்பாய்ப்பாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக