5611.
மன்னனாம் படுகளத்தில் உயிரைத்தானும் மார்க்கமுடன் விடுவதற்கு அஞ்சவில்லாய்
தென்னதன் போல்திக்கெட்டும் புகழவல்லாய் தேசமெங்கும் மாண்பர்களுந் துதிக்கவல்லாய்
இன்னிலத்தில் அவதரித்து மகுடம்பூண்டு எழிலான ராஜாதி ராஜனென்றும்
நன்னயமாய் பராபரத்தின் ரூபங்கொண்டு நயமுடனே யவதரித்தோன் வேந்தனாமே
5612.
வேந்தனாஞ் சத்தியத்தில் வாக்குபெற்றோன் வேதாந்த மனோன்மணியாள் அருளும்பெற்றோன்
போந்தமுடன் மகம்மேரு வில்லும்பெற்றோன் புகழான விசயனென்று பேருங்கொண்டோன்
சாந்தமுடன் வேதவழி தன்னிற்சென்றோன் தவந்தனிலே தான்மிகுந்த யோகவானாய்
காந்திமதி கொண்டதொரு விலாசனாக காசினியில் இருப்பவனே யரசனாமே
5613.
அரசனாம் இப்படியே காலாங்கிநாதர் வன்புடனே குளிகையது பூண்டுகொண்டு
முரசுடனே முன்சொன்ன வமைப்புபோல முப்பத்தி ரண்டரசர் தன்னைக்கண்டார்
திறமுடனே காலாங்கி தாள்பணிந்து தீர்க்கமுடன் அடியேனுங் குளிகைபூண்டு
உரமான பதினாறு அரசர்தம்மை வுத்தமனும் அடியேனுங் கண்டிட்டேனே
5614.
கண்டேனே ராஜாதி சக்கரவர்த்தி காசினியில் நானிருந்த நாட்கள்மட்டும்
உண்டான சக்கரவர்த்தி பதினாறுகண்டேன் ஓகோகோ நாதாக்கள் சொன்னதில்லை
அண்டபுவ னங்களெல்லாம் கண்டராஜர் அவனிதனில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
தண்டவன ரிஷிகளெல்லாஞ் சித்துதாமும் தாரணியில் மறைத்தாரே கோடியாமே
5615.
கோடியா மின்னமொரு மார்க்கங்கேளு குறிப்பான புலிப்பாணி மைந்தாபாரு
நாடியே வடிவேலர் தியானமப்பா நாட்டுகிறேன் யுந்தனுக்கு நன்மையாகும்
கோடியுக மிருந்தாலும் என்னலாபம் குவலயத்தில் கதிபெறவே வழிதான்வேண்டும்
தேடிய பரஞ்சுடரை நண்ணவேண்டி தேசத்தில் உறுதிமனங் கொண்டிடாயே
5616.
கொண்டிடவே வடிவேலர் தன்னையப்பா கூறுகிறேன் வசியமென்ற மார்க்கஞ்சொல்வேன்
கண்டறிய வேணுமென்றால் கைலாசர்தம்மை கருத்தினிலே சதாகாலம் நித்தஞ்செய்து
பண்டதிகமானதொரு பழவர்க்கங்கள் பாலகனே சர்க்கரையாம் அமுதுதானும்
விண்டதொரு வறுகோண நிர்த்தஞ்செய்து விருப்பமுடன் பிரணவத்தை மாறுவாயே
5617.
மாறலென்றால் மேல்மூலங் கீறலொன்று மகத்தான அடிமூலங் கீறலொன்று
ஆறுவுடன் கீழ்த்திகையாம் கீறலொன்று வப்பனே மேற்றிசையாங் கீறலொன்று
மீறலுடன் தென்றிசையாங் கீறலொன்று மேன்மையுடன் வடதிசையாங் கீறலொன்று
வாறலுடன் குணதிசையாங் கீறலொன்று வகுப்பான கீறலது வறுகோணமாமே
5618.
கோணமாம் மூலவரை சூலம்போடு குறிப்பான வரையாறும் மூலஞ்சூலம்
வேணபடி நடுமையங் கரணம்போடு வேகமுடன் சுழிமையம் பிரணவந்தான்
சேணமது வாராமல் பிரணவத்தை செப்புகிறேன் வுள்மூலங் கொண்டுமாறு
காணறிய பரஞ்சுடராம் வடிவேலர்தாமும் கர்த்தனைப்போல் வந்துதிப்பார் பாருபாரே
5619.
பாரப்பா மேல்மூலம் ஹரிவோம்பாடு பாங்கான கீழ்மூலம் ஐயுங்கிளியும்
நேரப்பா கீழ்மூலம் சௌவும்சிரியும் நேர்மையுடன் ஹரியுடனே இம்மென்றோது
சீரப்பா அங்குடனே லிங்வங்ஓங் சிறப்பான சிங்குடனே ஆங்கென்றோது
ஆரப்பா மங்யங்நங்நங் கென்றேசொல்லு வப்பனே சிவசுப்பிர மணியென்பாயே
5620.
என்னவே அம்பிகை பாலாவாவா எழிலான சரவண பவனேவாவா
துன்னவே வசிவசி வருகவருக துப்புரவாய் சுவாஹாயா சிரோமணியேவாவா
பன்னவே பிரணவத்தை யோதும்போது பாலகனே சுப்பிரமணியர் நிர்த்தஞ்செய்வார்
மின்னவே மயில்வாகன ரூபராக மீட்சியுடன் தரிசனைக்கு உள்ளாவாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக