பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5361-5370

5361.
அறிவான செந்தூர மென்னசொல்வேன் வப்பனே குன்றியிடை தானெடுத்து 
முறியாத வெள்ளிதனில் பத்துக்கொன்று முறையாகத் தானுருக்கிக் கொடுத்துப்பாரு
குறியான மாற்றதுவும் யேழதாகும் கொற்றவனே நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து
முறிபோன்ற மூசைதனில் உருக்கிக்கொண்டு மயங்காமல் புடத்தகட்டாய் வடித்துப்போடே
5362.
அடித்துமே தகடதனை யருண்மைந்தாகேளு அப்பனே முன்சொன்ன செந்தூரத்தை
நடிக்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணித்தாய் நாதாந்தத் தேவியரின் தாள்பணிந்து
படியான செந்தூரம் பரித்தகட்டில் பக்குவமாய்த் தான்பூசிப் புடத்தைப்போடு
கடியான கடிசதுவும் மிகவேநீங்கி கனகமென்ற தங்கமது வாங்கும்பாரே
5363.
தங்கமாம் பரிதியென்ற பிரிவியாச்சு தாரணியில் நாதாக்கள் செய்யும்வேதை
பங்கமது நேராது வொருக்காலந்தான் பாரினிலே தருமிகட்கு கிட்டும்பாரு
குங்குமப்பூ தன்னிறமாகத் தங்கந்தங்கம் குவலயத்தில் காண்பதுவும் அறிதேயாகும்
அங்கமென்ற குகைதனிலே இருக்குஞ்சித்தர் சட்டமுடன் செய்கின்ற பாகந்தானே
5364.
தானான யின்னமொரு பாகங்கேளு தண்மையுள்ள செந்தூரம் திரிவங்கந்தான்
கோனான கரிவங்கம் வெள்வங்கந்தான் கொற்றவனே நாகமது சரியாய்க்கூட்டி
மானான ஜெயநீராம் என்னசொல்வேன் மகத்தான ஆறுவகை ஜெயநீர்தன்னில்
பானான மூன்றுவகை திரிவங்கந்தான் பட்சமுடன் குகைதனிலே வுருக்கித்தீரே
5365.
உருக்கியே ஜெயநீரில் தாக்குதாக்கு வுத்தமனே நாகமது கண்ணுறங்கி
பெருக்கமுள்ள கண்ணதுவும் தானொடுங்கி பேரான சவளையது போலேயாகும்
நெருக்கமுடன் சூதமது நிகராய்ச்சேர்த்து நேர்மையுடன் கல்வமதிலிட்டு மைந்தா
பொருக்கவே கெந்தியது நாலுக்கொன்று பொங்கமுடன் தான்சேர்த்து வரைக்கக்கேளே
5366.
கேளப்பா கெந்தியுடன் தாரங்கூட்டி கெடியான மனோசிலையும் துருகவீரம்
நாளப்பா போகாமல் யிடைதானொக்க நாயகனே கெந்தியிடை தானுங்கூட்டி
ஆளப்பா வாறுவகை ஜெயநீர்தன்னால் வப்பனே நாற்சாம மரைத்துமேதான்
பாளப்பா போகாமல் நிழலுலர்த்தி பாலகனே முன்போல பொடிசெய்வாயே
5367.
பொடியான மருந்ததனை யெடுத்துமைந்தா பொங்கமுடன் காசிபென்ற மேருதன்னில்
படியளவாய் குப்பிதனிற் பாதியிட்டு பாலகனே யேழுசீலை வலுவாய்ச்செய்து
வடியுடனே ரவிதனிலே காயவைத்து கனமான வாலுகையா மேந்திரத்தில்
துடியாக நாற்சாம மெரித்தபோது துப்புரவாய் செந்தூர மாகும்பாரே
5368.
பாரேதான் செந்தூரந் தனையெடுத்து பாங்குபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
தீரேதான் தானுருக்கி குருவொன்றீய திறமான மாற்றதுவுங் காணும்பாரு
சீரேதான் வோட்டிலிட்டு வூதிப்போடு சிறப்பான மாற்றதுவும் எட்டதாகும்
நேரேதான் பத்துக்கோர் தங்கஞ்சேர்க்க நிலையான மாற்றதுவு மாகும்பாரே
5369.
ஆகுமே தங்கமது என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் செய்யும்வேதை
ஏகுமே செந்தூரந் தனையெடுத்து யெழிலான குடவனிலே கொடுத்துப்பாரு
போகுமே வூறலது யேகியல்லோ பொங்கமுடன் மாற்றதுவும் ஆணித்தங்கம்
பாங்குபெற தங்கமது சிவத்துக்காகி பாரினிலே தவயோகி காண்பான்தானே
5370.
காண்பானே நாதாக்கள் தாள்பணிந்து கருத்துரவே மனதுவந்து நடந்துகொண்டால்
ஆண்பான வாதமது சித்திக்குந்தான் அடவான பெரியோர்கள் கிருபைதன்னால்
மாண்பான சிவஞானம் கிட்டும்பாரு மறவாமல் சின்மயத்தை மனதிலுன்னி
ஜாண்பாம்பே யானாலும் பிடிவேண்டல்லோ சட்டமுடன் தெருவழியில் நில்லாய்தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக