5581.
பண்மையாய் வையகத்தில் மடிந்தபேரை பாருலகில் ராஜாதி ராஜர்தாமும்
வண்மையுடன் கலியுகத்து மாண்பர்தம்மில் வளமையுடன் ராஜாதி ராஜரெல்லாம்
நன்மைபெற தொகைகணக்கு கண்டதில்லை நாணிலத்தில் மடிந்தவர்கள் சேதியப்பா
உண்மைபெற சீனபதி மாண்பரெல்லாம் வுற்றதொகை சற்றேறக் கண்டார்தாமே
5582.
கண்டாரே சீனபதி மாண்பர்தாமும் காசினியில் துகைக்கணக்கைத் தாமறிந்தார்
விண்டதொரு ராஜாதி ராஜரெல்லாம் விருதாவாய் வையகத்தை யாண்டுமென்ன
கொண்டல்வண்ணன் அச்சுதனும் காணாமற்றான் குவலயத்தில் தான்மடிந்தார் மற்றொன்றுமில்லை
அண்டர்முனி ராட்சதர்கள் ஆனபேரும் அவனிதனில் கணக்கதனை யறியார்காணே
5583.
காணவே வையகத்துக் கணக்கையெல்லாம் கண்டறிந்தார் எந்தன்குரு நாதசாமி
தோணவே யவரிருந்த நாட்கள்மட்டும் தோறாமல் மாண்பரிட தொகையைத்தானும்
பூணவே யுகாந்தவரை சாத்திரத்தை புகழான காலாங்கி நாதர்தாமும்
மாணவே தொகுப்பினது வரலாறெல்லாம் வளமுடனே கண்டறிந்து வகுத்திட்டாரே
5584.
வகுத்தாரே புலிப்பாணி மைந்தாகேளு வளமையுள்ள கண்மணியே சொல்வேன்பாரு
தொகுத்ததொரு மாண்பர்களின் கணக்குதம்மை தொல்லுலகில் தாமறிந்த மட்டுஞ்சொன்னார்
தகுத்திடவே வையகத்தி னளவுதானும் தகமையுடன் பூமிவள மேதென்றாக்கால்
மிகுந்திடவே சத்தசாகர முஞ்சேர்த்து மேதினியில் மூன்றுபங்கு ஜலமுமாச்சே
5585.
ஆச்சப்பா பூமிவளம் நாலிலொன்று வப்பனே கர்த்தரது ஏற்பாடல்லோ
பாச்சலுடன் பூமிக்குப் பாதியல்லோ பாங்கான மலைவளங்கள் என்னலாகும்
மாச்சலுடன் தீவுகளும் அஷ்டதிக்கு மகத்தான திசைநான்கு மென்னலாகும்
ஆச்சரிய மானதொரு பட்டினங்கள் வதில்நான்கு ஓர்புரமுஞ் சொல்லலாமே
5586.
சொல்லவென்றால் முப்புறமுங் காடேயாகும் தோறாமல் பட்டினத்தின் தொகைதான்சொல்வேன்
வெல்லவே பட்டினங்கள் அறுபத்திநான்கு மேன்மையுடன் குரிச்சிகளோ கணக்கோயில்லை
புல்லவே நதிபாகம் நூற்றிருபதாகும் புகழான சிறுநதி களனந்தங்கோடி
மேல்லவே ஏரிவகை யிருநூற்றிப்பத்து மேன்மையுடன் கால்வாய்கள் கணக்கில்லைதானே
5587.
தானான தேவதாஸ் தலங்கள்தன்னை சாற்றுகிறேன் அஷ்டதிக்குப் பூமிமட்டும்
கோனான காலாங்கி நாதர்தாமும் கொற்றவனார் குளிகையது பூண்டுசென்ற
தேனான தேவாலயத் தொகையைச்சொல்வேன் தேற்றமுடன் நூற்றி ருபத்திரண்டு
மானான மகாஸ்தலங்கள் இதுவேயாகும் மகத்தான சிறுஸ்தலங்கள் சொல்லொண்ணாதே
5588.
ஒண்ணாது மானிடர்கள் வளப்பஞ்சொல்வேன் வுத்தமனே காலாங்கி கிருபையாலே
திண்ணமுடன் வையகத்தில் திசைகளெட்டும் சுத்திவந்தேன் சத்தகடல் பூமியெல்லாம்
அண்ணாந்து மலைவனத்தில் சிகரங்கண்டேன் அதிலிருந்த மார்க்கமெல்லாந் தெரிந்தேன்யானும்
வண்ணமுடன் மானிடரின் ரூபந்தன்னை வளமையுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
5589.
கேளப்பா சிலதேச மாந்தர்தானும் கெடியான ரூபமது அஸ்வரூபம்
மாளப்பா சிலதேச மாண்பர்தானும் மகத்தான சிங்கமென்ற முகமேயாகும்
ஆளப்பா சிலதேச மாண்பர்தானும் வப்பனே ஆஞ்சநேய ரூபமாகும்
வீளப்பா சிலதேச மாண்பர்தானும் விகாரமுள்ள ராட்சதரின் பேதமாமே
5590.
ஆமேதான் சிலதேச மாண்பரப்பா வப்பனே யலைகடலி லிருப்பார்தானும்
நாமேதான் சிலதேச மாண்பர்தானும் நலமுடைய மன்மதன் ரூபம்போலும்
போமேதான் சிலதேச மாண்பரப்பா புகழான ரூபமது பார்க்கொண்ணாது
தாமேதான் ரூபமது விகாரரூபம் தனியான ஜலரூபம் சொல்லொண்ணாதே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக