பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5671-5680

5671.
என்னவே திரிசூலி பிரணவத்தை எழிலான சத்துருவின் பாவுக்கல்லோ
சொன்னபடி மந்திரமாம் வட்சரத்தை சோறாமல் தானுரைத்து வுருவுபோடு
நன்னயமாய் வுருவதும் ஏதென்றாக்கால் நலமான ஹரிஹரி யென்றேயோது
குன்றான அரனொளி சக்கரத்தை கொற்றவனே சொரூபமதில் நின்றுஓதே
5672.
ஓதவே திருதிரு யென்றேயோது ஒளிவான சக்கரத்தை பின்னுமோது
நீதமுடன் திருபுரையின் புவனைவாலை நிலையான ஓம்பத்திர காளிவாவா
தோதமுடன் சத்துரு சம்மாரிவாவா தோறாமல் ஓம்ஓம் யென்றேயோது
ஆதமுடன் வுன்கையில் கபாலமேந்தி கண்ட கோடாளி யென்னே
5673.
கோடாலி யென்றதொரு பீஜமோது கொற்றவனே அகோரமென்ற கோரவாவா
தாடாண்மை கொண்டதொரு உக்ரஉக்ர தண்மையுள்ள புகைபுகை தனியேவாவா
பாடான்மை பெற்ற ஜலஜலமே வாவா பாங்கான கும்பயகும்பய மென்றேயோது
நீடாண்மை ஹணஹண நீயேவாவா நிகட்சியுடன் தகதக யென்றேயோதே
5674.
என்றவுடன் பாஷயபாஷய வென்றேயோது எழிலான அம்இம்குரோம் யென்றேயோது
வென்றிடவே லலிலலிலாங் கென்றேயோது வேதாந்தத் தாயினது கிருபையாலே
சென்றிடவே லிலிலிலிகிலிகிலி யென்றேயோது செயலான லுலுலுலுலும் யென்றோது
தென்றிசையாற் பரிபாஷை குறையாமற்றான் செயலான வட்சரத்தை யோதுவீரே
5675.
ஓதுவீர் உயிரென்ற பிரணவந்தான் ஓகோகோ நாதாக்கள் சொல்லமாட்டார்
தீதுபுகழ் அட்சரங்கள் கூறொண்ணாது தீரமுடன் மமமமவசங் கென்றோது
வாதுகுரி சிவசிவயா மென்றேயோது மகத்தான குருகுருவா வென்றோது
சூதுபுகழ் ஓம்கிலிம்கிலியும் வாவா சுந்தரனே பகவதியே சுடரென்றோதே
5676.
சுடறான ஓங்குடனே பாஷாங்குசத்ரி சுத்தமுள்ள சூலிசூலி வாவாவாவா
தடமான சொரூபமதில் நகநகவென்றோது தாக்கான கலைவகுத்து தகதகவென்றோது
திடமுடனே எகுடஎகுட வட்சரத்தை தீர்க்கமுடன் தலைசுழற்றி மாறுமாறு
சடமுடனே கும்பகரூம்பக மென்றோது சாங்கமுடன் சுவரலாமென் றோதல்கூறே
5677.
கூறவே சுசீசுவாலாம் யென்றேயோது குறிப்பான பிரணவத்தை தலைகீழாய்மாறு
மாறவே பிரதிசுவால மென்றேயோது மகத்தான அக்கினிச் சுவாலாவென்று 
ஆறவே நரதிர யென்றேயோது வப்பனே கருவான பீஜமாகும்
மீறவே கோமாங்கிஷ பட்சணியேவாவா மிக்கான பாஜிபந்துபந் தென்றோதே
5678.
பந்தான பந்ததுவும் குருபீஜமாகும் பாங்கான அகோரகோர வட்சரந்தான்
சிந்தனையில் தானினைக்கு மாறுமாறு சிறப்புடனே டாட்டேடாட்டே யென்றேயோது
தொந்தமுடன் ஐயுங்கிலியும் தற்கொவ்வாது சூதான வட்சரந்தான் அதர்வணமேயாகும்
பந்தமுள்ள வட்சரங்கள் ஒவ்வொன்றுதானும் பாலகனே யொன்றுக்கொன்று உயிருமாமே
5679.
உயிரான மெழுத்துக்கு ஒவ்வொன்றுக்கும் வுத்தமனே பஞ்சபூத ஆவியுண்டு
பயிலான வட்சரந்தான் மாமாமாகி மகத்தான ராம்ராம்ரீம் மென்றோது 
பயிலான வட்சரந்தான் ரூம்ரூம்மாகும் ஆக்குருஷா ஆக்குருஷா யாகும்
ஒயிலான கிலியும்சௌவும் ஐயம்மாகும் வுத்தமனே பகவதிஓம் மென்றேயோதே
5680.
ஓம்யென்ற அட்சரந்தான் சத்துருசங்காரம் ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்தார்
ஆமென்ற சத்துருவை மடிமடியென்றோது வப்பனே மசிமசிநசிநசி யென்றோது 
ஏம்யென்ற வட்சரந்தான் படுபடுசுவாஹா எழிலான மித்துருவுக் கிதுபோலுண்டு
தீம்யென்ற சுடரான வட்சரந்தான் தீர்க்கமுடன் மித்துருவுக் குண்டேபாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக