பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5751-5760

5751.
ஏகவே சட்டமுனி வாறேதென்றால் யெழிலாக எண்ணூறு வாண்டுமட்டும்
போகவே சமாதிமுகம் மூன்றுமுறைதானும் பொங்கமுடன் பூமிதனில் இருந்துமல்லோ
சாலமுடன் வெகுகால மிருந்தசித்து சாங்கமுடன் சீஷவர்க முபதேசங்கள்
ஆகமங்கள் ஓதியல்லோ இருந்தசித்து வப்பனே யோகமா சித்துமாமே
5752.
ஆமேதான் இன்னமொரு மார்க்கங்கேளு வப்பனே இடைக்காடர் வரலாறுசொல்வேன்
போமேதான் வெகுகால மிருந்தசித்து பொங்கமுடன் காயாதி கற்பங்கொண்டு
நேமமுடன் நிஷ்டையது பூண்டுகொண்டு நெடுங்காலம் நூறாண்டும் இருந்தசித்து
வாமமுடன் தேவதா சாபத்தாலே வையகத்தில் இருந்ததொரு சித்துவாச்சே
5753.
ஆச்சப்பா தன்வந்திரி வயதுமார்க்கம் வப்பனே சொல்லுகிறேன் மன்னாகேளு
பாச்சலுடன் வயததுதான் எண்ணாறுண்டு பாங்குடனே சமாதிமுகங் கொண்டசித்து
மூச்சடங்கி தன்வந்திரி பகவான்தானும் மூன்றுமுறை சமாதிதனி லிருந்தசித்து
மின்னவே காலாங்கி நாதர்தம்மின் விருப்பமுடன் உபதேசங் கொண்டசித்தே
5754.
என்னலாம் வெகுகோடி மாண்பர்மெச்சும் எழிலான தன்வந்திரி பகவான்தானும்
பன்னவே மூலத்தின் ஈசரப்பா பாங்கான வயததுதான் ஏதென்றாக்கால் 
துன்னவே இருநூறு வாண்டுமாகும் துப்புரவாய் பூமிதனில் இருந்தசித்து
மின்னவே காலாங்கி நாதர்தம்மின் விருப்பமுடன் உபதேசங்கொண்ட சித்தே
5755.
சித்தான சித்துமுனி மூலத்தீசர் சிறப்பான மலைதனிலே இருநூறாண்டு
சத்தியுடன் பூசையது செய்துமல்லோ சாங்கமுடன் மலைதனிலே அயிக்கியமாகி
வித்தகனார் சீஷவர்க்க மாண்பரோடும் விருப்பமுடன் சுனைதனிலே இறங்கினார்பார்
சத்தபரி சங்களற்று தரணிமீதில் சாங்கமுடன் தானிருந்தார் சிலநாள்தானே
5756.
தானான யின்னமொரு மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்கு சொன்னநீதி
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேஜொளிவின் மயங்கொண்ட கும்பயோனி
பானான பராபரத்துக் கொப்பதான பாருலகில் அகஸ்தியரைப் பகருவேனே
5757.
பகருவேன் அகஸ்தியருக்கு வயதேதென்றால் பட்சமுடன் துகைகணக்குக் கூறொண்ணாது
நிகரமுடன் சொல்வதற்கு யாராலாகும் நீதியுடன் நூல்தனிலே யுரைத்தமார்க்கம்
அகரமென்ற வட்சரமும் அவராலாச்சு வப்பனே நாலுயுகங் கடந்தசித்து
சகரமெலாந் தான்துதிக்கும் கும்பயோனி சதுரான வகத்தியர் என்றமையலாமே
5758.
அறையலாம் வெகுகோடி காலமப்பா வப்பனே சமாதிமுகம் இருபத்தொன்று
நிறையவே சமாதிமுகம் வையகத்தில் நேர்மையுடன் தானிருந்த சித்துமாகும்
குறையவே வயததுதான் சொல்வதற்கு குவலயத்தில் முடியாது ஒருவராலும்
மறையவே நூல்தனிலே காண்பதற்கு மகத்தான வயததுவும் இல்லைதானே
5759.
இல்லையே இன்னமொரு மார்க்கங்கேளு எழிலான புலிப்பாணி மைந்தாபாரு 
தொல்லுலகம் புகழுஞ் சிவவாக்கியர்தாமும் தோறாத வையகத்தில் வெகுநாளப்பா
புல்லவே சமுசார வாழ்க்கைவேண்டாம் புகழான வன்பத்தோ ராண்டுமட்டும்
வெல்லவே சமுசார வாழ்க்கையற்று வெகுநாளா யிருந்ததொரு சித்துமாச்சே
5760.
ஆச்சப்பா வெகுகால வருஷமாக வப்பனே சமுசார வாழ்க்கையற்று
மூச்சடங்கி மடந்தனிலே இருந்தசித்து மூர்க்கமுடன் சமுசாரம் வேண்டியல்லோ
பாச்சலுடன் தாய்தந்தை சீர்பாதத்தை பணிந்துமே மனதுவந்து கேட்டார்தாமும்
மாச்சலுடன் தாய்தந்தை மனங்களித்து மார்க்கமுடன் மகன்தனையே கேட்டார்தாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக