5421.
வன்பான கல்லதுவும் வெண்மையாச்சு வப்பனே திரவியங்கள் எடுக்கலாச்சு
வென்றிடவே நீலாஞ்சனக் கல்லினாலே விருப்பமுடன் வையகத்தில் நிதியனைத்தும்
குன்றான மலைபோலே எடுக்கலாகும் கொற்றவனே நீலமென்ற கல்லினாலே
வென்றிடவே நவகோடி ரிஷிகளெல்லாம் வேகமுடன் கண்டறிந்து மறந்தார்தாமே
5422.
மறந்தாரே வெகுகோடி ரிஷிகளப்பா மகத்தான சிடிகையென்ற வேதைதன்னை
துறந்தாரே காலாங்கி நாதர்தாமும் துப்புரவாய் வையகத்து மாண்பருக்கு
சிறந்ததொரு நூல்பார்த்துக் கண்டாராய்ந்து சிறப்புடனே சொன்னதொரு நீதியெல்லாம்
கறந்ததொரு பால்போல யிருக்குமப்பா காலாங்கி சொன்னதொரு வாக்குமாச்சே
5423.
வாக்கான சீனபதிப் பெண்களெல்லாம் வளமுடனே வெண்காகங் கல்லெடுத்து
நோக்கமுடன் வுள்ளங்கை அஞ்சனத்தில் நுணுக்கமுடன் கல்லதனைக் கையில்வைத்து
ஏக்கமுடன் ஆகாயந் தன்னைக்காண யெழிலான வதிசயங்க ளுள்ளதெல்லாம்
ஆக்கமுடன் தோன்றிற்று மாண்பருக்கு வப்பனே வானவதி சயங்கள்தானே
5424.
அதிசயமாம் வானத்துள் மார்க்கமெல்லாம் வப்பனே சப்தலோகமெல்லாம் தோன்றும்
பதியான வையகத்தின் அதிசயம்போல் பான்மையுடன் வானத்தின் அதிசயங்கள்
மதியான சந்திரனுஞ் சூரியன்தான் மகத்தான வருந்துதியுங் காணலாகும்
துதியான கைபாகம் யார்தான்காண்பார் துப்புரவாய் சீனபதி மாண்பர்தாமே
5425.
மாண்பரா மின்னமொரு மார்க்கங்கேளு மகத்தான சீனபதிப் பெண்களெல்லாம்
காண்பான வெள்ளையென்ற காகந்தன்னில் கருத்துடனே கருவதனைக் கண்டாராய்ந்து
மாண்பான வையகத்தோர் பிழைக்கவென்று மார்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
ஆண்பான வுபதேசம் பெற்றுமல்லோ வன்புடனே குளிகைகொண்டு வந்திட்டேனே
5426.
வந்தேனே சீனபதிவிட்டு மைந்தா மகத்தான குளிகையது பூண்டுகொண்டு
அந்தமுடன் வையகத்து மாண்பருக்கு வன்புடனே யான்கண்ட வித்தையெல்லாம்
சொந்தமுடன் உபதேசம் செய்யவெண்ணி துப்புரவாய் அதிதமெல்லாம் உரைத்தேனப்பா
பந்தமுடன் எந்நாளும் பதாம்புயத்தை பற்றியல்லோ பதவிவழி நடந்திடாயே
5427.
நிற்கவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் நிலையான புலிப்பாணி மைந்தாகேளு
வற்பமென்று நினையாதே யிந்தப்போக்கு வருமையுள்ள சீனபதிப் பெண்களுக்கு
சொற்பதமாய் ஈடொன்று சிடிகைவேதை செப்பினேன் சீனபதிப் பெண்களுக்கு
வுற்பனமாய் யானுரைத்த கைமசக்கு வுத்தமனே ஈறுவகை சொல்வேன்பாரே
5428.
பாரேதான் மருளினூ மத்தைவித்து பாங்கான காய்ப்பாகல் வித்துங்கூட்டி
நேரேதான் சாதிக்காய் தன்னோடொக்க நேர்மையுடன் கொவ்வையுட வித்துதானும்
சீரேதான் சுழல்வண்டு தானுமப்பா சிற்பரனே குழியானைத் தானுங்கூட்டி
வீரேதான் காந்தமது தானுங்கூட்டி விருப்பமுடன் ஈப்புலியுங் கூடக்கூடே
5429.
கூட்டியே மதனபூவும் வபின்கிராம்பு கொற்றவனே பேய்க்கருப்பன் சாற்றாலாட்டி
வாட்டமுடன் தானரைப்பாய் நாலுசாமம் வகையாக யிடைசரியாய் தானரைப்பாய்
நாட்டமுடன் பயிரதுபோல் திரட்டிமைந்தா நயம்பெறவே குளிகையது செய்துகொண்டு
வாட்டமுடன் மதியீடு பெண்களுக்கு வப்பனே கொடுத்துவிட வகைதான்கேளே
5430.
வகையான குளிகைதனை பதனம்பண்ணு வன்மையுடன் அறுகலையாந் தன்னிற்றானும்
சிகையான பார்த்தவகை தன்னிற்றானும் சிறப்புடனே யுனதுவிந்து கூடச்சேர்த்து
பகையான மாந்தர்கட்கு கொடுத்தாயானால் பண்பான மனதுவந்து பிரியமாகி
திகையான மதிமயக்கங் கொண்டுமல்லோ தீரமுடன் உன்னைவந்து யனைவார்காணே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக