பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5261-5270

5261.
காணவென்றால் மடிந்தவர்க்கு சாத்திரங்கள் கைலாயஞ் சென்றவர்க்குப் பார்க்கலாமோ
தோணவே வுடல்பொருள்கள் ஆவியெல்லாம் தோற்றாமல் மண்ணோடே மண்ணாய்ப் போச்சு
வேணதொரு சாத்திரங்கள் பார்த்தாலென்ன பார்த்தாலும் வையகத்தி லிருப்பாருண்டோ
பூணவே யாகாத நாளில்மாண்டோர் புகழான வாத்துமமும் இருந்ததுண்டோ
5262.
இருந்துமே வையகத்தில் மாளிவிட்டு யெழிலான கிரகமது போவதுண்டோ
திருந்தவே வருடமது ஆறுதிங்கள் திறமான மாளிதனி லிருந்துகொண்டு
பொருந்தவே பெற்றோர்கள் குடும்பத்தோரை பொங்கமுடன் வம்புகளுங் கூர்வதுண்டோ
வருந்தியே மாண்டதொரு கிரகந்தன்னை வளமுடனே தானடைப்பார் பாருபாரே
5263.
பாரப்பா நலமான நாளில்மாண்டோர் பாருலகில் கிரகத்தை விட்டுமல்லோ
நேரப்பா சமுதாயங் கைலாயத்தில் நேர்மையுடன் அடைக்கலமாய் சென்றதென்றும்
சீரப்பா வாத்துமமுங் கைலாயத்தில் சிறப்புடனே சென்றதென்பார் மாண்பரெல்லாம்
ஆரப்பா கண்டவர்கள் வையகத்தில் ஆருமில்லை வுண்மையிது பாருபாரே
5264.
பாரேதான் தேகமது மண்ணாய்ப்போச்சு பாருலகில் ஆத்துமமும் காணார்மாண்பர்
சீரேதான் ஒடுக்கநிலை யாருங்காணார் சிறப்பான பிரபஞ்ச வாழ்க்கனைத்தும்
வேரேதான் மறுபிறப்புங் கண்டதுண்டோ வெட்டவெளி யாகாயமொன்றுங் காணோம்
தீரேதான் சென்றநிலை காணாமற்றான் திகைத்துமே மாண்பரெல்லாம் திகைப்பார்தானே
5265.
தானான காலாங்கி எந்தநாதர் தகமையுள்ள வாக்கதுவும் பொய்யெண்ணாது
கோனான யென்குருவாம் சற்புருஷன்வாக்கு குவலயத்தில் பொய்யாது மெய்யேயாகும்
மானான மகதேவர்படி நிதானம் மார்க்கமுடன் வயததுவுங் கூறியல்லோ
தேனான தேவரது பாதங்காண தெளிவான கட்டளைக ளுண்டுபாரே
5266.
உண்டான கட்டளைகள் அமைந்திருக்க ஓகோகோ சாஸ்திரங்கள் வேதமென்ன
திண்டான நல்லநாள் தீயநாளும் திகழுடனே மகதேவர் படைப்பாருண்டோ
சண்டாள மாண்பரெல்லாம் சாத்திரத்தை தக்கபடி யுணராமல் மதியீனத்தால்
கொண்டபடி யவரவர்கள் தியானத்தாலே குறிப்புடனே தீயநாள் என்றிட்டாரே
5267.
இட்டாரே தீயநாள் நல்லநாளா யெழிலான சாத்திரங்கள் கூர்வதுண்டோ
விட்டகுறை யமைந்தபடி மாண்பர்க்கெல்லாம் மேதினியில் சாஸ்திரங்கள் மெய்யதாச்சு
நட்டமது மாண்பர் தன்னால் நாதாக்கள் சாத்திரங்கள் ஏதுக்காச்சு
பட்டமது தான்பிறந்த பாவனைப்போல் பாருலகில் சாத்திரம் பொய்யதாச்சே
5268.
ஆச்சப்பா வையகத்தில் சாத்திரங்கள் அனேகமுண்டு நாதாக்கள் செய்தநூலில்
மூச்சடங்கிப் போனதொரு தேகந்தானும் மூதுலகில் திரும்பி வந்தசேதியில்லை
பாச்சலுடன் சாத்திரங்கள் கற்றுமென்ன பாங்கான தத்துவங்கள் அறிந்துமென்ன
ஆச்சரிய மானதொரு தேகமப்பா வவனியிலே இருப்பதுவும் பொய்யுமாச்சே
5269.
பொய்யாது தேகமது நிலைநில்லாது பொங்கமுடன் சாஸ்திரங்கள் வேதமென்ன
மெய்யான வாத்துமமும் அழியாதென்று மேதினியில் கட்டுமுறை வாக்கியந்தான்
வெய்யவே சாஸ்திரத்தின்ஆகமங்கள் விட்டகுறை யிருந்தல்லோ வெளியுமாச்சு
பையவே யவனன்றி ஓரணுவுதானும் பாருலகில் அசையாது மெய்யதாமே
5270.
ஆமேதான் கெட்டநாள் நல்லநாளாய் ஆகவைக்க வுன்னாலே யாகுமோதான்
போமேதான் கதிரோனின் நாளையெல்லாம் பொங்கமுடன் நல்லநா ளென்றிருக்க
வேமேதான் நாளெட்டும் நல்லநாளாய் வேதாந்தத் தாயினது கிருபையாலே
ஆமேதான் நாதரவர் செய்திருக்க வப்பனே நம்மாலே யாவதென்ன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக