5301.
பாரேதான் இன்னமொரு மார்க்கம்பாரு பாருலகில் மாணாக்கர் பிழைக்கவென்று
சீரேதான் சிடிகையென்ற வேதைசொல்வேன் சிறப்பான நாதாக்கள் சொன்னதில்லை
நேரேதான் பலபலவாஞ் சாத்திரத்தில் நேர்மையுடன் பாடிவைத்த சித்தரெல்லாம்
தீரேதான் நுணுக்கமென்ற வேதைதானும் திறமுடனே பாடிவைத்த வுண்மைபாரே
5302.
உண்மையாய் மாணாக்கள் பிழைக்கவென்று வுத்தமனே ஏமமென்ற சிடிகைவேதை
நன்மையென்ற பாஷாணஞ் சிங்கிதானும் நயமான தாளகமும் பூரங்கூட்டி
வெண்மையெனும் குச்சியென்ற வீரந்தானும் வெளியான கௌரியென்ற பாஷாணந்தான்
தண்மையுள்ள துருசுடனே துத்தங்கூட்டி தகமையுள்ள வெடியுப்பு கூடச்சேரே
5303.
சேர்க்கவே வெண்காரஞ் சீனந்தானும் சிறப்பான நாகமுடன் சூதங்கூட்டி
ஏற்கவே மதியுப்பு தானுஞ்சேர்த்து யெழிலான கெந்தகமுஞ் சாரங்கூட்டி
தீர்க்கமுடன் லிங்கமது வொன்றாய்ச் சேர்த்து சிறப்புடனே சரியிடையாய் நிறுத்துக்கொண்டு
ஆர்க்கவே மூவகையின் ஜெயநீராலே வப்பனே நாற்சாமம் அரைத்திடாயே
5304.
அரைத்துமே வில்லையது லகுவாய்ச் செய்து வன்பான ரவிதனிலே காயப்போடு
வரைக்கலம் போலாகப் பீங்கான்தன்னை வளமுடனே தானமைத்துப் பீங்கான்மூடி
திரையான சீலையது வலுவாய்ச் செய்து திட்டமுடன் ரவிதனிலே காயவைத்து
சுரைபோல பூமிதனில் குழிதானப்பா சுத்தமுடன் சாணிளம் குழிதான்செய்யே
5305.
செய்யவே குழிதனிலே மணலைக்கொட்டி சிறப்புடனே மேலதனில் பீங்கான்வைத்து
பையவே மேலுமந்த மணலைக்கொட்டி பாங்குபெற புடமதுவும் யெருவுபத்து
வெய்யவே சுடராறிக் குளிர்ந்தபின்பு வேதாந்தத் தாய்தனையே மனதிலுன்னி
உய்யவே செந்தூரந் தனையெடுத்து வுத்தமனே குழிக்கல்லிற் தன்னிற்போடே
5306.
போடேதான் பின்னுமந்த செயநீர்தன்னால் பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நீடேதான் சிறுபில்லைத் தகடுபோலாம் நிட்களங்க மாகவல்லோ பில்லைசெய்து
நாடேதான் ரவிதனிலே காயவைத்து நலமாக முன்போல பீங்கான்தன்னில்
சூடேதான் வில்லையது வுள்ளேவைத்து சுத்தமுடன் சீலையது வலுவாய்ச்செய்யே
5307.
வலுவான சீலையது ரவியில்வைத்து வளமுடனே காய்ந்தபின்பு யெடுத்துமுன்போல்
மலுவான புடமதுவும் போட்டுமைந்தா மார்க்கமுடன் தீயாறி யெடுத்துப்பார்க்க
சுலுவான செந்தூர மென்னசொல்வேன் சுந்தரனே சத்திசிவம் அதிலேகாண்பாய்
வலுவான செந்தூர மிதற்கீடுண்டோ வையகத்தில் சித்தர்முனி சொல்லாரன்றே
5308.
அன்றான செந்தூர துந்தபாகம் வப்பனே புடம்பஞ்ச தசமுமாகும்
வென்றிடவே புடமதுவும் போட்டுமைந்தா விருப்பமுடன் தானெடுத்து சிமிளில்வைத்து
குன்றான மகமேரு செந்தூரத்தை குறிப்புடனே பாச்சுதற்கு வகையைக்கேளிர்
தென்றிசையில் பொதிகைமுனி கும்பயோனி செப்பவிலை யிந்தமுறை செப்பார்தாமே
5309.
தானான குன்றியிடை செந்தூரத்தை தகமையுள்ள வாறுமாற் றாணியாக
கோனான யென்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனார் சொன்னதொரு நீதிபோல
பானான பரித்தகடு லேசாய்த்தட்டி பட்சமுடன் களஞ்சிக் குன்றிவீதம்
மானான மூவகையின் ஜெயநீராலே மயங்காமல் செந்தூரங் குழைத்துக்கொள்ளே
5310.
கொள்ளவே செந்தூரந் தன்னையப்பா குறையாமல் களஞ்சியென்ற பொன்தகட்டில்
மெள்ளவே புத்தீசல் இறகுபோல மேன்மையுடன் தான்தடவி செப்பக்கேளிர்
வள்ளலுடன் காவிக்கால் தானுங்கூட்டி வளமான யெருச்சாம்பல் தன்னிற்சேர்த்து
உள்ளபடி ரெண்டையுந்தான் ரேசித்தல்லோ வுத்தமனே தகடதனை வைக்கக்கேளே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக