பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5681-5690

5681.
உண்டான வட்சரத்தால் பகையாளிதம்மை வுத்தமனே ரோகமதை விளைக்கலாகும்
கண்டாலும் விடுவார்கள் புத்திமான்கள் காசினியில் யாரறிவார் இந்தப்போக்கு
திண்டான சாத்திரங்கள் ரிஷிகள்தேவர் தீர்க்கமுடன் இந்நூல்போல் சொன்னாரில்லை
பண்டான பிரணவத்தால் பாரில்மாண்பர் பார்தனிலே மாளுவது திண்ணந்தானே
5682.
தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
கோனான மாரணத்தால் மடிந்தோர்தம்மை கொற்றவனே எழுப்புதற்கு மார்க்கஞ்சொல்வேன்
தேனான மனோன்மணியாள் பாதம்போற்றி செப்புவேன் மாணாக்கள் பிழைக்கவென்று
பானான சாத்திரத்தின் யுயிரெழுத்தை பாருலகில் பாடுகிறேன் பண்பாய்த்தானே
5683.
பண்பான அதர்வணத்தால் மடிந்தோர்தம்மை பாலகனே விதிப்படியே கொண்டுவந்து
நண்பான மசானமென்ற கரையிலப்பா நாயகனே சடங்கதுபோல் சவத்தைத்தானும்
திண்மையுடன் தானிறுத்தி காவலோடும் தீரமுடன் காளியின்தன் வசியத்தாலே
உண்மையாய் பிரணவத்தை யுச்சாடிக்க வுத்தமனே வுயிரதுவும் வருகும்பாரே
5684.
பாரென்றால் பிரணவங்கள் ஏதென்றாக்கால் பாங்கான ஹரிஓம் கிலியும்சௌவும்
நேரேதான் அம்மம்இம் மென்றேயோது நெடிதான கும்பகத்தின் அட்சரந்தான்
சீரேதான் சிங்லிங்வங் கென்றேயோது சிறப்பான ரீங்ரீங்ரீங் ராவென்றேயோது
தீரேதான் யௌவும்சௌவும் கிரீமென்றோது தீர்க்கமுடன் பிரணவத்தை யோதுவாயே
5685.
ஓதவே ரூம்ரூம்லூம் மென்றோது வுத்தமனே லௌவுடனே வௌவென்றோது
நீதமுடன் ஞௌவுடனே பௌவென்றோது நிலையான லாடகவி பிரணவந்தான்
சாதகமாய் சுடல்காத்தான் மசானங்காத்தான் சாங்கமுடன் ருத்ராவி ருத்ரவீரி
ஆதமுடன் மசானத்தின் எல்லைக்காரி அதிகாரி வரிச்சந்திர பகவான்காணே
5686.
காணவே வாய்க்கரிசிக் குடையதேவா கருவான தரமாங் காளிவசியா
பூணவே செம்பூசி நாட்டும்பாலா புகழான வுந்தியென்ற வூசிநீதான்
வேணவே விருட்சமென்ற வடமூலந்தான் மிக்கான வேர்பிடுங்கி வசியதேவா
ஆணவத்தில் மிகுந்ததொரு அகோரதீரா வப்பனே சோடசங்களுடை யோன்தானே
5687.
சோடசமாம் பதினாறு கரமும்பெற்ற சூலமுடன் கையேந்தும் டாகினிவாவா
பாடமுடன் மசானதுர்க்கி வாவா பார்மீது சிம்பத்தின் பகவதிவாவா
ஆடலுடன் சங்கீதம் வாத்தியங்கேட்கும் வன்பான அகோரவீர காளிவாவா
கூறலுடன் தென்கூடப் பதியமர்ந்து கோடாலி யுதிரபலி கொள்ளுந்தேவே
5688.
கொள்ளவே குடற்பிடுங்கி மார்பிற்ஜெஞ்சம் கொடியதொரு எதிராளி சத்துருமாரி
துள்ளவே யதர்வணத்தைத் தலைகீழாக்கி துப்புரவாய் முடியோடு மாலைபூண்டு
விள்ளவே வாய்க்கரிசி துள்ளிவீழ விஷங்குடித்த வாயாலே யமுர்தங்கொள்ளு
உள்ளபடி யமுர்தரசங் கொள்வாயப்பா வுத்தமனே போனவுயிர் வாவென்றோதே
5689.
ஓதவே தலைமாடு கால்மாடாக்கி வுத்தமனே சடந்தனையே பீரட்டுவாய்நீ
சாதகமாய் சடாட்சரபவனே வாவா சட்டமுடன் போனவுயிர் திரும்பிவாவா
வேதனைகள் நீங்கியல்லோ வுருட்டிப்பார்த்து வேகமுடன் அதர்வணந்தான் இல்லையில்லை
தூதனையுங் காலனையுஞ் செபித்தேனென்று துப்புரவாய் லட்சமுரு போடுபோடே
5690.
போடப்பா நாதாந்த வுள்ளெழுத்தை பொங்கமுடன் லட்சமுரு போடுபோடு
ஆடப்பா மசானகரை நின்றுகொண்டு வப்பனே வாசல்வழி தடைகள்கட்டி
நீடப்பா வரிச்சந்திரன் காவல்முன்னே நிச்சயமாய் அதர்வணத்தால் சிக்கினோனை
பாடப்பா மசானகரை விட்டுவிட்டு பார்மீது ஓடிவிடு ஓடென்றாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக