5761.
தானான பிரகாசமான ஜோதி தண்மையுள்ள சிவவாக்கிய புனிதவானே
கோனான குருநாதர் கடாட்சத்தாலே கொற்றவனே சமுசார வாழ்க்கைவேண்டி
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் இல்வாழ்க்கை கேட்டீரப்பா
மானான யில்வாழ்க்கை கேட்டதாலே மன்னவனே இப்போது செய்யலாமே
5762.
செய்யவே சந்தோஷங் கொண்டுமல்லோ சிறப்புடனே மனதுவந்து மனம்நொடிந்தார்
துய்யவே சிவவாக்கியர் பெயருண்டாக துப்புரவாய் சிவானந்தர் பிறந்தார்தாமும்
வெய்யவே எண்பத்தோர் ஆண்டுமட்டும் விருப்பமுடன் சிவவாக்கியர் தாமிருந்து
வையகங்கள் தான்புகழ சமாதிமார்க்கம் வளமுடனே யிறங்கியதோர் வளமைபாரே
5763.
பாரேதான் இன்னமொரு மார்க்கங்கேளு பாங்கான புலிப்பாணி மன்னாபாரு
நேரேதான் ராமரெனுந் தேவரப்பா நேர்மையுடன் வெகுகால மிருந்தசித்து
சேரேதான் வயததுவும் இருநூறாண்டு செம்மலுடன் சமாதிமுகம் சென்றசித்து
கூரேதான் மூன்றுமுறை வையகத்தில் குறிப்புடனே சமாதிமுகம் போனார்காணே
5764.
காணவே யின்னமொரு மார்க்கங்கேளு கருவான புஜண்டருட வயதுமார்க்கம்
தோணவே முந்நூறு வறுபதாண்டு தோறாமல் குகைதனிலே இருந்தசித்து
பூணவே சமாதிமுகம் ஏறவில்லை பொங்கமுடன் முந்நூற்றி அறுபதாண்டு
வேணபடி வையகத்து வதிசயங்கள் விருப்பமுடன் யான்கண்டேன் வனேகந்தானே
5765.
தானேதான் சித்தர்முனி புஜண்டர்தாமும் தண்மையுள்ள சீஷவர்க்கம் தனையழைத்து
சோனையிலே எந்தனுக்கு சமாதிபூண சுத்தமுடன் சுரங்கமது செய்யவென்ன
ஆனையள வாகவல்லோ சுரங்கஞ்செய்து வண்புடனே மனதுவந்து கூறலுற்றார்
மானையவர் கைபிடித்து சுரங்கந்தன்னில் மார்க்கமுடன் சாரலிடஞ் சென்றிட்டாரே
5766.
சென்றாரே புஜண்டரெனும் சித்துதாமும் சிறப்புடனே சமாதிமுகஞ் சென்றபோது
குன்றான மலைமீதிற் கூடிருந்த குறிப்பான மானதுவும் மனதுவந்து
வென்றிடவே ரிஷியாரின் சித்துபாதம் வெகுநாளாய் தான்வளர்த்த சாபத்தாலே
அன்றுமே கூடிருந்த மான்தானப்பா வப்பனே சமாதிமுகஞ் செல்லலாச்சே
5767.
ஆச்சப்பா சமாதிமுகஞ் சென்றபோது வப்பனே சீஷவர்க்க மாண்பர்தானும்
மூச்சடங்கிப் போனதொரு புஜண்டரப்பா முனையான வையகத்தில் வருவதில்லை
பாச்சலுடன் சமாதிமுகம் மூடியல்லோ பண்பான பாறைகொண்டு யேகியல்லோ
வீச்சலுடன் மாண்பரெல்லாம் வெளியேகி விட்டாரே கோடிதளங் காணலாச்சே
5768.
காணவே யின்னமொரு கருமானங்கேள் காசினியில் கருவூரார் என்றசித்து
தோணவே நடேசரென்னும் கருவுண்டாகி துப்புரவாய் பாண்டியனுக் கருளுந்தந்தார்
பூணவே பாண்டியன் தேவாலயத்தில் பொங்கமுடன் நடேசரைத்தான் செய்துவைத்தேன்
தோணவே காயாதி கற்பங்கொண்டு தொல்லுலகில் வெகுகால மிருந்தசித்தே
5769.
சித்தான கருவூரார் என்றசித்து சின்மயத்தில் பேரின்பங் கொண்டசித்து
முத்தான வயததுவும் முந்நூராண்டு மூதுலகில் பாண்டியனுக் குகந்தசித்து
பத்தியுடன் சிதம்பரமாம் தேவஸ்தானம் பட்சமுடன் நிர்மித்த ஞானசித்து
சத்தியெனும் மடாலயங்கள் உண்டுபண்ணி சாங்கமுடன் சமாதிமுகஞ் சென்றசித்தே
5770.
சென்றதொரு சித்துமுனி மார்க்கங்கேளு செயலான புண்ணாக்கு ஈசரப்பா
தென்றிடவே வயததுதான் நூற்றிரண்டுபத்து விருப்பமுடன் மரப்பொந்தில் இருந்தசித்து
குன்றுமலை குளிகையது யனியாச்சித்து கோபாலா கோபாலா வென்னுஞ்சித்து
தென்றிசையில் வடகோடி கானகத்தில் திருவாத்தின் மரத்தின்மே லிருந்தசித்தே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக