பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5771-5780

5771.
சித்தான சித்துமுனி நாதருக்கு சிறப்பான வாசானாம் பாம்பாட்டியாகும்
சத்தான வையகத்தில் சிலதுகாலம் சாங்கமுடன் அறியாத வாலிபத்தில் 
சுத்தமுடன் அரிபூசை சிவனார்பூசை சுந்தரனார் எந்நேரஞ் செய்துகொண்டு
கத்தனே கோபாலா கோபாலாவென்று காசினியில் வாய்ப்பினத்தித் திரிவார்பாரே
5772.
பாரேதான் மாண்பர்களைக் கண்டபோது பாலகனார் வாய்திறந்து யாருங்கேளார்
நேரேதான் பசிவந்து வுற்றபோது நேர்மையுடன் கோபாலா வென்றசத்தம்
வீரேதான் வீரிட்டு சபதமிட்டு விண்ணுலகைக் கண்திறந்து பார்க்கும்போது
ஆறோதான் தேவாதி வரத்தினாலே வப்பனே பால்பழமுந் தருவார்தானே
5773.
தானான பால்பழமு முண்டபின்பு தாக்கான வழிதடங்கள் காணமாட்டார்
கோனான பாம்பாட்டி தனைநினைந்து கொற்றவனார் நடுவீதி பள்ளிகொள்வார்
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேசமெல்லாந் தான்திரண்டு வந்திப்பார்கள்
மானான புண்ணாக்கர் கண்திறந்து மகத்தான கோபாலா யென்பார்தானே
5774.
என்னவே புண்ணாக்கு ஈசர்தாமும் யெழிலான மண்ணதனைத் தானெடுத்து 
உன்னிதமாய் மாண்பருக்குத் தான்கொடுப்பார் வுத்தமனே மண்ணதுவுந் தித்திப்பாகும்
பன்னவே நோயாளி யார்வந்தாலும் பட்சமுடன் மண்கிள்ளித் தான்கொடுப்பார்
சொன்னபடி நோயாளி ரோகந்தீர்ந்து சுத்தமுடன் போவார்கள் மெத்தவுண்டே
5775.
உண்டான மாண்பருக்கு புண்ணாக்கீசர் வுத்தமனே பிரிதிவென்ற மண்ணைத்தானும்
வண்மையுடன் தான்கொடுத்து வியாதிரோகம் வளமையுடன் தான்தீர்ப்பார் அதீதமெத்த
திண்மையுடன் சிலகாலஞ் சென்றபின்பு தீர்க்கமுடன் வயததுவும் நூறாண்டாச்சு
கண்மையுடன் வையகத்தி லிருக்கலாகா தற்பரனைக் காணவெண்ணி நினைத்திட்டாரே
5776.
இட்டதொரு புண்ணாக்கு மீசர்தாமும் எழிலான திருவாத்தின் மரத்தின்கீழே
சட்டமுடன் திருப்பொந்தி லிருந்துகொண்டு சாங்கமுடன் சிவயோகஞ் செய்துமல்லோ
திட்டமுடன் சிலநாட்கள் கழிந்தபின்பு தீர்க்கமுடன் மரப்பொந்தில் அயிக்கியமாகி 
பட்டமரந் துளுத்தல்லோ வையகத்தில் பட்சமுடன் மாண்பருக்கு குருவுமாச்சே
5777.
குருவான திருவாத்தி மரத்தையப்பா கொற்றவனே வையகத்து மாண்பரெல்லாம்
திருவான ரோகமது கண்டபோது தீர்க்கமுடன் மரத்துக்குக் காப்புகட்டி
சருவான சருகுவகை கியாழமிட்டு சட்டமுடன் தானருந்தி ரோகந்தீர்ந்து
பெருமையுடன் வையகத்தில் புனிதவானாய் பேருண்டாய் வெகுநாளாய் வாழ்ந்தார்தாமே
5778.
வாழ்ந்தாரே யின்னமொரு மார்க்கங்கேளு வகுப்பான புலிப்பாணி மைந்தாபாரு
ஆழ்ந்தவே காலாங்கி கடாட்சத்தாலே வப்பனே வேங்கைதனி லேறிக்கொண்டு
தாழ்ந்திடவே ஜலந்திரட்டி புனிதவானும் சாங்கமுடன் தாரிணியில் சுற்றிவந்தோன்
மூழ்ந்திடவே வெகுகோடி காலமப்பா மூதுலகில் இழிந்ததொரு சித்துபாரே
5779.
பாரப்பா புலிப்பாணி பாலனான பட்சமுடன் உந்தனுக்கு வயதுசொல்வேன்
ஆரப்பா வயததுவும் அறுநூறாண்டு வப்பனே வையகத்தி லிருந்தசித்து
நேரப்பா சமாதிமுகஞ் சென்றதில்லை நேர்மையுடன் நெடுங்கால மிருந்தசித்து
சீரப்பா சிவயோகந் தன்னிற்சென்று சிறப்புடனே சின்மயத்தி லிருந்தசித்தே
5780.
இருந்துமே வெகுகால மானசித்து எழிலாக எந்தனிட வுபதேசங்கள்
பொருந்தவே தானடைந்து புனிதனாவாய் பொங்கமுடன் வையகத்தி லிருந்தசித்து
திருந்தவே மலைகுகைகள் வனாந்திரங்கள் தீரமுடன் கண்டறிந்த சித்துவாகும்
கருந்தமிழும் செந்தமிழும் கலந்தசித்து காசினியில் உபவாசச் சித்துமாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக