5651.
பாரேதான் உந்தனையும் சபிக்கவந்தால் பாலகனே தூமதா பிரணவத்தை
நீரேதான் உச்சாடம் செய்யும்போது நிஷ்களங்க மாகியல்லோ வணங்கியுன்னை
சேரேதான் அருகழைத்து யுந்தனுக்கு செப்புவார் வேணவுப தேசமெல்லாம்
வேரேதான் உபதேசம் உந்தனுக்கு வேண்டுமோ தூமதா மந்திரந்தானே
5652.
தானான தூமதா மந்திரத்தால் சட்டமுடன் தரணிதனை ஜெயிக்கலாகும்
கோனான யிடையூறு வந்தபோது கொற்றவனே மந்திரவுச் சாடனத்தை
தேனான மனோன்மணியைத் தானினைத்து செப்பிடவே யுந்தனுக்கு எல்லாஞ்சித்தி
பானான தேவதா மந்திரத்தை பட்சமுடன் ஆருக்குஞ் சொல்லொண்ணாதே
5653.
ஒண்ணான குருமந்திரம் தேவதாமந்திரம் வுத்தமனே புலிப்பாணி யுந்தனுக்கு
திண்ணமுடன் உபதேசஞ் செய்தேனப்பா தீர்க்கமுடன் எந்நாளும் மனதிலுன்னி
வண்ணமுடன் வுந்தனுக்கு இடையூற்காலம் வந்திட்டால் பிரணவத்தை வுச்சாடித்து
தண்ணமுடன் சின்மயத்தி லிருந்துகொண்டு சதாநித்தம் தேவியைநீ போற்றுவாயே
5654.
போற்றுகிறேன் யின்னமொரு வசியங்கேளு புகழான புலிப்பாணி மைந்தாபாரு
ஆற்றலுடன் கறுப்பண்ணன் வசியந்தன்னை வப்பனே மாணாக்கள் பிழைக்கவென்று
மாற்றவே குளிகையது பூண்டுகொண்டு மகத்தான சீனபதி விட்டுமல்லோ
ஏற்கவே மலையாள பதியிலப்பா எழிலாக வாறாண்டு இருந்திட்டேனே
5655.
இருந்தேனே தூமதா தேவஸ்தானம் எழிலான சன்னிதிக்கு வடபாகத்தில்
பொருந்தவே சமாதியது யானுங்கண்டேன் பொங்கமுடன் கறுப்பண்ணன் விருட்சமுண்டு
திருந்தவே குளிகையது யானும்விட்டு தீரமுடன் சமாதிபுரம் நிற்கும்போது
அருந்தவசி யங்கொருவர் இருந்தாரப்பா வப்பனே எந்தனையுங் கண்டிட்டாரே
5656.
கண்டாரே சித்துமகா ரிஷியார்தாமும் கருத்தாக எந்தனைத்தான் கண்டபோது
திண்மையுடன் யாரென்று என்னைக்கேட்க தீர்க்கமுடன் காலாங்கி சீஷனென்றேன்
வண்ணமுடன் தாள்பணிந்து வடியேன்தானும் வளமாக சிரங்குனிந்து தெண்டனிட்டேன்
கண்ணபிரான் தன்னைப்போல் ரூபங்கொண்ட கர்த்தாவும் எந்தனையும் மதித்திட்டாரே
5657.
மதித்துமே எந்தனையும் ஆசீர்மித்து மகிழ்ச்சியுடன் ஞானோபஞ் செய்வேனென்றார்
துதித்துமே யடியேனும் மனதுவந்து துப்புரவாய் தமதுடைய பாதாரந்தான்
மதித்துமே வையகத்தில் அடியேன்தானும் வளமையுடன் சதாநித்தங் குருவென்றெண்ணி
கதிப்புடனே காலாங்கி என்றுசொல்லி கர்த்தாவே எந்நாளும் மறவேன்தானே
5658.
மறவேனே என்றுசொல்லி மனங்களித்து மார்க்கமுடன் அடியேனுங் கூறும்போது
திறமான சமாதியிது கறுப்பண்சமாதி தீரமுடன் விருட்சாதி விருட்சத்தின்கீழ்
உறமுடனே வெகுகோடி காலமாக வுத்தமனே சமாதியிட தவசியானும்
குறைவதுவும் நேராமல் கோடிகாலம் கொற்றவனே யானுமல்லோ இருந்திட்டேனே
5659.
இட்டேனே வெகுகோடி காலமப்பா எழிலான கருப்பண்ணன் சமாதிபக்கல்
வட்டமுடன் எத்தனையோ கோடாகோடி வண்மையுள்ள தவசிகளும் வருவார்போவார்
சட்டமுடன் கறுப்பனுக்கு எதிரானோர்கள் சாங்கமுடன் இதுவரையிற் கண்டதில்லை
திட்டமுடன் கறுப்பண்ணன் வசியந்தன்னை தீர்க்கமுடன் அனேகம்பேர் கேட்டிட்டாரே
5660.
கேட்டாரே வெகுமாண்பர் கேட்டாரப்பா கெடியான கறுப்பண்ணன் வசியந்தன்னை
வாட்டமுடன் ஒருவருக்குஞ் சொன்னதில்லை வண்மையுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
தாட்டிகமாய் குளிகையது பூண்டுகொண்டு தண்மையுடன் போகுகின்ற வுனக்குமைந்தா
நீட்டமுடன் பிரணவத்தை யுபதேசித்தேன் நிஷ்களங்க மாகவல்லோ கேளுகேளே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக