5311.
கேளப்பா விக்கல் யெருவுக்குள்ளே கெவனமுடன் பரித்தகட்டைமேலேவைத்து
நாளப்பா போகாமல் தீயைமூட்டி நலம்பெறவே தகடதனை உள்ளமர்த்தி
சூளப்பா புடம்போட வர்ணமாகி சுந்தரனே வரணமது சொல்லொண்ணாது
ஆளப்பா யிப்படியே வறுபுடமுந்தீர்த்தால் வப்பனே தங்கமென்ற வரணமாச்சே
5312.
ஆச்சப்பா வரணமென்ற யேமந்தன்னை வப்பனே மூசையிட்டு வுருக்கிப்பாரு
மூச்சடங்கி வரணமது யேறியல்லோ முனையான யேமமது பசும்பொன்னாச்சு
மாச்சலென்ற பிறவியது தங்கமாச்சு மகத்தாக சுயத்தங்கம் இதற்கீடாமோ
யேச்சென்றுங் கூறார்கள் பிறவித்தங்கம் யெழிலான சாயமென்ற தங்கந்தானே
5313.
தானான தங்கமது பிரகாசந்தான் சதகோடி சூரியருக் கொப்பேயாகும்
கோனான சித்துமுனி ரிஷிகள்தேவர் குவலயத்தில் எந்தனைப்போல் கூறவில்லை
தேனான மனோன்மணியாள் பூசைக்காக செப்பியதோர் வித்தையது வர்ணம்பொன்னாம்
மானான பொன்னிதுதான் எவர்தான்காண்பர் மகத்தான சிவயோகிக் காண்பார்பாரே
5314.
பாரேதான் யின்னமொரு மார்க்கங்கேளு பாலகனே புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் செந்தூரந் தனையெடுத்து நேர்மையுடன் முன்சொன்ன நீராலாட்டி
சீரேதான் குடவனையே தகடுதட்டி சிறப்பாக மருந்ததனை மேலேபூசி
நீரேதான் சொன்னபடி மார்க்கமப்பா நிருதியுடன் புடம்போட பொன்மாற்றாமே
5315.
மாற்றான பொன்னதுவும் என்னசொல்வேன் மகத்தான தங்கமது பிறவிக்கொப்பாம்
நாற்றமுள்ள குடவனது கட்டிப்போச்சு நலமான நாதாக்கள் கண்டதில்லை
கூற்றமெனுஞ் செம்பதுவும் வூறலேகி குணமான நாகமது சீறல்நின்று
ஏற்றமது வாராமல் பொன்னேயாகில் யெழிலான மாற்றதுவுங் காட்டுந்தானே
5316.
காட்டுமே குடவனிலே எட்டுமாற்று கண்காணா வித்தையடா ரிஷிகள்வித்தை
நீட்டமுடன் சமுசாரிக்கான வித்தை நிலையான வித்தையது வேறுண்டோசொல்
பாட்டனார் காலாங்கித் தூதனப்பா பண்டையுள்ள காலாங்கி நாதருக்கு
சூட்டியதோர் யிவ்வேதை சூக்குமவேதை சூட்சமுடன் காட்டிவிட்டார் ஐயர்தாமே
5317.
தாமான பாட்டனவர் காலாங்கிக்கு தயவுடனே கூறினதோர் வேதைமார்க்கம்
நாமேதான் பட்சம்வைத்து எந்தன்மீது நலமுடனே வோதிவைத்த சுளுக்குவேதை
போமேதான் வையகத்தில் பொய்யாகாமல் பொங்கமுடன் மாணாக்கர் பிழைக்கவென்று
வேமேதான் மேதினியில் பலநூல்பார்த்து வேகமுடன் வோதிவைத்தார் வையத்தோர்க்கே
5318.
வையகத்தோர் பிழைக்கவென்று கருமானங்கள் வகையுடனே சொல்லுகிறேன் மைந்தாபாரு
பொய்யாது யென்குருவாங் காலாங்கிவாக்கு பூதலத்தில் மெய்யாகும் பொய்யேயில்லை
மெய்யான நூல்பார்த்து மாண்பருக்கு மேதினியில் கண்டறிந்த சுளுக்குவேதை
செய்தாலுங் கைகூடும் ஏமவேதை செப்பினார் எந்தன் காலாங்கிதானே
5319.
தானான யின்னமொரு கருமானங்கேள் தகமையுடன் உரைப்பேனே மைந்தாபாரு
கோனான என்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனா ரெந்தனுக்கு சொன்னநீதி
தேனான செம்பதுவும் தூலமேயாகும் தெளிவான செம்பதனை யெடுத்துக்கொண்டு
மானான மனோன்மணியாள் சித்தரூபி மகிழ்ச்சியுடன் தாமரைத்து கவசம்போடே
5320.
போடேநீ கவசமது செய்துமைந்தா பொங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
நீடேதான் கோழியென்ற புடத்தைப்போடு நிட்களங்க மாக்கியல்லோ கத்திசெம்பாம்
கூடேதான் செம்பதுவும் ஊறலேகி குணமான காந்தியது மிகவுண்டாச்சு
ஆடேதான் செம்பதுவும் என்னசொல்வேன் வப்பனே சத்திசிவம் இதிற்காண்பாயே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக